Sunday, May 31, 2020

449. தன்பாட்டில் வான்-மீது (மான் குட்டி இப்போது என் கையிலே) **

தன்பாட்டில் வான்-மீது நில்லாமலே மண்மீது வந்தானடி (sm)

நம்-பாட்டில் ஓர்-கோது காணாமலே நீறைப் பொழிந்தானடி (sm)

தன்பாட்டில் வான்-மீது நில்லாமலே மண்மீது வந்தானடி

அவன் நம்பாட்டிலே-கோது காணாமலே நீறைப் பொழிந்தானடி

பேதங்கள் காணாமலே சாயி அன்பைப் பொழிந்தானடி (2)

(MUSIC)

வாய்ப்பேச்சு மட்டும்-என்றில்லாமலேயவன் மண்ணில்நடந்தானடி(2)

என்மூச்சு அன்பேநீ என்றேசொல்லி அவன் சேவை-புரிந்தானடி(2)   

ஆனந்தப் பண்பாடுவான் சாயி அதிலே-நம் புண்ணாற்றுவான்

பேதங்கள் காணாமலே சாயி அன்பைப் பொழிந்தானடி  

தன்பாட்டில் வான்-மீது நில்லாமலே மண்மீது வந்தானடி

(MUSIC)

கண்ணேஎன் பொன்னே-என்றேகொஞ்சுவான் அவன்-

 அன்புக்கோர் எல்லை-இல்லை

ஏய்-துன்ன..போத்தென்று நமைத்-திட்டுவான் அதில் போகும்நம் நெஞ்சம் கொள்ளை

வானத்தில் சிம்மாசனம் இல்லை நெஞ்சே-அவன் ஆசனம்

நீரோடி கண்-சோரவே போதும் நன்றாகும் நம்-ஜன்மமே

தன்பாட்டில் வான்-மீது நில்லாமலே மண்மீது வந்தானடி

(MUSIC)

அன்போடு நீகூறு சாய்ராம்என்று அதில் போகும்உன் பாவம்நூறு (2)

கனிவோடு நீஆற்று சேவைநன்று அதில் சொர்க்கத்தை நேரில்பாரு(2)

தாயென்று வந்தானடி வினையின் நோய்போகச் செய்தானடி 

பேதங்கள் காணாமலே சாயி அன்பைப் பொழிந்தானடி 

தன்பாட்டில் வான்-மீது நில்லாமலே மண்மீது வந்தானடி

அவன் நம்பாட்டிலே-கோது காணாமலே நீறைப் பொழிந்தானடி

பேதங்கள் காணாமலே சாயி அன்பைப் பொழிந்தானடி (2)

No comments:

Post a Comment