Saturday, May 30, 2020

425. மனிதன் வடிவம் கொண்டு (மனிதன் நினைப்பதுண்டு) **


மனித உருவு-கொண்டு அன்பு ரூபம்-கொண்டு

இறைவன் கொண்டதின்று நாமம் சாயி என்று

மனித உருவு-கொண்டு அன்பு ரூபம்-கொண்டு (2)

இறைவன் கொண்டதின்று நாமம் சாயி என்று (2)

 மனித உருவு-கொண்டு அன்பு ரூபம்-கொண்டு

(MUSIC)

தந்தை வடிவில்-வந்தான் தாயின் மடி-அவன்-தான் (2)

அன்பைச் சுரந்து-தந்தான் அதில் அளவு கடந்து நின்றான்

மனதில் புகுந்து நின்றான் மாற்றம் புரிந்து வந்தான்

அன்பில் உலகையெல்லாம் அவன் ஆட்சி புரிந்து வந்தான்

மனித உருவு-கொண்டு அன்பு ரூபம்-கொண்டு

 (MUSIC)

ஜாதி-மதங்களெல்லாம் கடந்து அருள்-சொரிந்தான் (2)

சேவை புரிந்து நின்றான்-அதை நமக்குச் சொல்லித் தந்தான்

அன்பு ரூபங்களே என்று நமை அழைத்தான்

நானும் நீங்களுமே அவன் ஒன்றென எடுத்துரைத்தான்

மனித உருவு-கொண்டு அன்பு ரூபம்-கொண்டு

 (MUSIC)

சாயி சேவையிலே நாம் முனைத்து பணியைச் செய்தால்

மதியும் தெளியுதடா பெரும் உண்மை விளங்குதடா

பிறர்க்குச் சேவை-இல்லை-அது நமக்கு ஆகுதடா

கணக்கைப் புரிந்துகொண்டால் நம் பிணக்குத் தீருமடா

மனித உருவு-கொண்டு அன்பு ரூபம்-கொண்டு

இறைவன் கொண்டதின்று நாமம் சாயி என்று



No comments:

Post a Comment