நாவினில் நாவினில் சாயிராம்
கைகளில் கைகளில் சேவையும்
கொள்வதே கொள்வதே பூஜையாம்
என்பதே சாயிராம் பாதையாம்
யோகமாய்ப்
பேரினைச் சொல்லுவாய்
யாகமாய்ச்
சேவையைக் கொள்ளுவாய்
தான்-எனும்
ஆணவம் தள்ளுவாய்
வேகமாய்
வல்வினை வெல்லுவாய்
நாவினில் நாவினில் சாயிராம்
யோகமாய்ப்
பேரினைச் சொல்லுவாய்
(MUSIC)
சாயிராம்-ஓம்
சாயிராம் ஓம்
தித்திக்கும்
திருநாமம் ஸ்ரீ சாயிராம்
எத்திக்கும்
நிறைகின்ற அது-ஓம்ஓம்ஓம்
(2)
கண்மூடி
கண்மூடி பேர்
சொல்லுவோம்
அருள்ஜோதி
அருள்ஜோதி தனைக்-காணுவோம்
ஆஹா….
நாவினில் நாவினில் பேரையும்
யோகமாய்ப் பேரினைச் சொல்லுவாய்
கைகளில் கைகளில் சேவையும்
யாகமாய்ச் சேவையைக் கொள்ளுவாய்
நாவினில் நாவினில் பேரையும்
(MUSIC)
விதி-மாறும்
பவ-மாயம் தான்-போகுமே
ஸ்ரீசாயி
திருநீறை நாம்-பூசவே
(2)
கனிவாக
உயர் சேவை நாம் செய்யவே
மதிலாக
அவன் நாமம் துணையாகுமே
நாவினில் நாவினில் பேரையும்
(MUSIC)
ஒருநாளும் அணையாத தீபம்-என்றே
உனக்குள்ளே
இருக்கின்ற நண்பன்-என்றே
மறைவாக
இருக்கின்ற ஆன்மம்-ஒன்றே
நீ-காண
இலக்காகும் என்றான்-நன்றே
நீ-யாரு
நான்-யாரு அன்பின்-ஆறு
நமக்கேது
முதலேது முடிவும்-ஏது
நீ-வாழு
நீ-வாழு அன்பில்-வாழு
உன்-வாழ்வு
என்-செய்தி என்றே-மாறு….. ஆஹா….
நாவினில் நாவினில் பேரையும்
யோகமாய்ப் பேரினைச் சொல்லுவாய்
சாயிராம் .. சாயிராம் .. சாயிராம்
No comments:
Post a Comment