Saturday, May 30, 2020

350. தண்ணீர் தந்தாய் (தண்ணீர் விட்டோ வளர்த்தோம்)


தண்ணீர் தந்தாய் புரிந்தாய் சாயீசா சேவையினை

கண்ணீர்-தந்தே சென்றாய் வருக மறுபடியும் (2)

(slow pace) + Music

தண்ணீர் தந்தாய் புரிந்தாய் சாயீசா சேவையினை

கண்ணீர்-தந்தே சென்றாய் வருக மறுபடியும்

(2)

சொந்தமெல்லாம் நீயேதான் என்னுயிரும் நீதான் (2)

வந்து பிறந்திடு வருக மறுபடியும்

கண்ணீர்-தந்தே சென்றாய்

( Music )

நூறாயிரம் பிறவி வரண்டு கிடந்த என்னில்

தேனாறு ஊறவந்த உன்முகத்தைப் பார்ப்பேனோ

(2)

வேதனையும் சோதனையும் போதுமையா இரங்கு (2)

நோகும் எந்தன் கருத்தறிந்து வாராயோ

(MUSIC)

சீக்கிரமே வந்திடுவேன்-என்றஉன்சொல் பொய்யாமோ

கண்கள் பெருகிடும்-நீர் மண்ணில் பெரும் ஆறாமோ

எந்தாய் நீ தந்த ப்ரேமையை-நான் உணர்ந்தேன்

உன்சேய்க்கு நீயின்றி அன்பளிப்பார் யாருளரோ

 (MUSIC)

நாள்தோறும் நான் துயரில் நொந்து கிடப்பதுவும்

நூலாகி உன்மடிக்கு ஏங்குவதும் காண்கிலையோ

(2)

எண்ணற்ற நல்லோர் இதயம் உருகி இரு கண்ணுற்ற நீரால் அழைப்பதுவும் கேட்கலையோ



No comments:

Post a Comment