Friday, May 29, 2020

348. அன்புருவாய் வந்த சாயி(ஒற்றுமையாய் வாழ்வதாலே)

விருத்தம்

வல்வினையின் சோதனையால் தடம்மாறி நான்சாயி பாதம்-தொழும்- வரம் இழந்தேன்

அனுதினம் உலகினில் யாக்கையாய் அவன்நடந்தும் கொஞ்சமும் உணராமல் இருந்தேன்

சிந்தனையில் அவன் நாமம் சிறிதேனும் சொல்லாமல் வாழ்க்கையெல்லாம் மந்த மதியால்

அறிவு மயங்கி இலவு காத்த கிளி ஆனேன் நானே…

----------------------

அன்புருவாய் வந்த-சாயி இன்று இல்லையே

அவன்-பிரிவின் துயரத்தினாலே மனதில் தொல்லையே

(2)

(MUSIC)

உலகோடு ஒன்றியே தினம்மாய வாழ்விலே

அக்ஞான ஜென்மமாய் இருந்தேனே வீணிலே

(2)

நெஞ்சில் உண்டான அன்பையே

தந்தானே தந்தையே உறவாகி வந்திடும் என்சாயி இல்லையே

அவன்-பிரிவின் துயரத்தினாலே மனதில் தொல்லையே

அன்புருவாய் வந்த-சாயி இன்று இல்லையே

அவன்-பிரிவின் துயரத்தினாலே மனதில் தொல்லையே

(MUSIC)

முகம் அந்தவெண்..ணிலா போல்-இன்பம் தந்ததே

இதம்தந்து பேசிய மொழி-தென்றல் போன்றதே

அதைஎன்று என்றுநான் அதைஎன்று காணுவேன்

சுமையாகும் வாழ்விலே சுகம்என்று காணுவேன்     

அவன்-பிரிவின் துயரத்தினாலே மனதில் தொல்லையே

அன்புருவாய் வந்த-சாயி இன்று இல்லையே

அவன்-பிரிவின் துயரத்தினாலே மனதில் தொல்லையே

No comments:

Post a Comment