Friday, May 29, 2020

338. அன்பே சாயி ( கண்ணே பாப்பா )



அன்பே சாயி அதன்மெய் உருவே சாயி (2)
அன்பினை-வந்தே சிந்தும் தந்தையும்-சாயி (2)
அன்பே சாயி மெய் உருவே சாயி
சிரசினில் மலர்ந்து… தலை-வழித்தேன்-வழிந்து (2)
நாவினில் இனித்து சுவை தருமவன் பேரு
அன்பே சாயி அதன்மெய் உருவே சாயி (2)
(MUSIC)
சித்திரமேஇரு கால்களைக்கொண்டு நடப்பதுபோல் பைய
பர்த்தியிலே-நல் தரிசனம்தந்தே அருளுமவன் மெய்யே
(1+sm+1)  
 உத்பவமாகும் அன்பே அவனில் ஆத்மலிங்கம் என்றே
நிந்தித்த பேர்க்கும் பேதமில்லாமல் அருளிடுமாம் நன்றே       
அன்பெனும் அமுது..அவனது மனது 
மனிதனின் வடிவு ..அந்த இறைகொண்ட முடிவு 
அன்பே சாயி மெய் உருவே சாயி (2)
 (MUSIC)
அன்புருவே என நம்மையழைத்தான் அதுஒரு தாலாட்டு 
அள்ளியெடுத்துக் குடித்திடலாமவன் அன்பெனும் நீரூற்று 
என்றும் வருவான் மானிட உருவாய் அதுஓர் விளையாட்டு 
காலையும்மாலையும் தரிசனம்தருவான் அவனே நடைபோட்டு
அன்பே சாயி மெய் உருவே சாயி



No comments:

Post a Comment