உந்தன் சேயென்று என்னை-எண்ணி நீ பாரம்மா
என் தாய்போல ஓடிவந்து அணை சாயிமா
(2)
யார் என்கூவல் தனைக்கேட்டு வருவாரம்மா
என்-கேவல் தனைப் போக்க வேறாரம்மா
உந்தன் சேயென்று என்னை எண்ணி நீ பாரம்மா
என் தாய்போல ஓடிவந்து அணை சாயிமா
(MUSIC)
இன்று சிலையாக உனைக் காணும் நிலை ஏனம்மா
உனைக்காண முடியாத கண் ஏனம்மா
இன்று சிலையாக உனைக் காணும் துயர் ஏனம்மா
உனைக்காண முடியாத கண் ஏனம்மா
கனலாகும் சிதை போல மனம் ஏனம்மா (2)
ஆறாத என் வாழ்வில் உயிர் ஏனம்மா
உந்தன் சேயென்று என்னை எண்ணி நீ பாரம்மா
(MUSIC)
எந்தப் பிழை-கண்டு நீ என்னைப் பிரிந்தாயம்மா
வளராத எனைக் கொஞ்சம் பொறுப்பாயம்மா
(2)
அன்பே உன் வடிவாகி வருவாயம்மா (2)
பொன் கோடி என் சாயி போலாகுமா
உந்தன் சேயென்று என்னை எண்ணி நீ பாரம்மா
என் தாய்போல ஓடிவந்து அணை சாயிமா
(MUSIC)
உன்னை அருவாக மனம் காணும் திறன் ஏதம்மா
உந்தன் ஒளிவீசும் அருட்காட்சி எனக்கேதம்மா
(2)
என் பாட்டில் குறை உண்டு அறிவேனம்மா (2)
என்றாலும் அதை நாளும் படிப்பேனம்மா
(vsm)
உந்தன் சேயென்று என்னை எண்ணி நீ பாரம்மா
என் தாய்போல ஓடிவந்து அணை சாயிமா
யார் என்கூவல் தனைக்கேட்டு வருவாரம்மா
என்-கேவல் தனைப் போக்க வேறாரம்மா
யார் என்கூவல் தனைக்கேட்டு வருவாரம்மா
என்-கேவல் தனைப் போக்க வேறாரம்மா
உந்தன் சேயென்று என்னை எண்ணி நீ பாரம்மா
என் தாய்போல ஓடிவந்து அணை சாயிமா..
No comments:
Post a Comment