எத்தனை நாட்கள் காத்திருப்போம்
என்றுனை நாங்கள் கண்டிடுவோம்
எங்களின் சிறிய அறிவுக்கு (2)
ஏதுரம் பிரிவைப் பொறுப்பதற்கு
எத்தனை நாட்கள் காத்திருப்போம் என்றுனை நாங்கள் கண்டிடுவோம்
(MUSIC)
பிறர்நலம் ஒன்றே பொதுநலம் என்றே அவன் நெஞ்சிலே நினைப்பு
அவன் நெஞ்சம் முழுவதும் அன்பு
தரிசனம் கொடுத்தான் அருள்மழை சொரிந்தான் (1+sm+1)
மதங்களைக் கடந்தான் மாற்றங்கள் புரிந்தான்
எத்தனை நாட்கள் காத்திருப்போம் என்றுனை நாங்கள் கண்டிடுவோம்
(MUSIC)
அவன் திருநீறு அதில்வினை கழியும்
அருவியைப் போலே கரத்தினில் பொழியும்
பார்வையில் பாகு அன்பதில் வழியும் (1+sm+1)
நம் துயர் நூறு தானே விலகும்
எத்தனை நாட்கள் காத்திருப்போம் என்றுனை நாங்கள் கண்டிடுவோம்
(MUSIC)
பிறர் படும் நோவைக் களைந்திடும் சேவை
அவர் தந்த பாதை அதுதான் பூஜை
(2)
உலகினில் தினமும் புரிந்திடு நம்பி
மனதினில் தோன்றும் அவனருள் துலங்கி
எத்தனை நாட்கள் காத்திருப்போம் என்றுனை நாங்கள் கண்டிடுவோம்(2)
எங்களின் சிறிய அறிவுக்கு (2)
ஏதுரம் பிரிவைப் பொறுப்பதற்கு
எத்தனை நாட்கள் காத்திருப்போம் என்றுனை நாங்கள் கண்டிடுவோம்
No comments:
Post a Comment