பக்கத்தில் வந்திருந்த சாயி
மண்ணைத் துறந்துநீ போனதெங்கே தாயே
(1+SM+1)
சேயுள அன்புத் தந்தை சாயீ
இன்று மாபெரும் துன்பம்தந்தாய் போயே
பக்கத்தில் வந்திருந்த சாயி மண்ணைத் துறந்துநீ போனதெங்கே தாயே
(MUSIC)
உள்ளத்தில் சுட்டக்கட்டி நோய்கொண்ட எனக்கு
பச்சைப் பவளம் முத்து மாணிக்கம் எதற்கு
செல்லமளிக்க வரும் ஸ்வாமியுன் பிறப்பு
ஐயா கொள்ளத் தயங்காதே எனக்கது மருந்து
பக்கத்தில் வந்திருந்த சாயி மண்ணைத் துறந்துநீ போனதெங்கே தாயே மண்ணைத் துறந்துநீ போனதெங்கே தாயே..
துறந்துநீ போனதெங்கே தாயே..
(MUSIC)
செல்வத்தை நானடைய சென்றேன் பின்னோடு
அன்றைக்கெனைப்-பிணைத்தாய் அன்னைஅன்போடு
என்றைக்கும் வந்திடுமோ சின்னஞ்சிறு ஓடும்
என்று அருள்மொழி சொல்லிவைத்தாய் என்னை உன்னோடு
பக்கத்தில் வந்திருந்த சாயி மண்ணைத் துறந்துநீ போனதெங்கே தாயே
(MUSIC)
உள்ளத்தில் சோகம் கொண்டு பாட்டினில் சொரியும்
பிள்ளை என்தாபம் எந்தன் ஸ்வாமிக்குப் புரியும்
ஞாலத்தில் மீண்டும்வந்து சொன்னதைப் புரியும் (2)
என் ஸ்வாமியுன் பிறப்பினில்பூ சொர்க்கமும் திறக்கும்
பக்கத்தில் வந்திருந்த சாயி மண்ணைத் துறந்துநீ போனதெங்கே தாயே
மண்ணைத் துறந்துநீ போனதெங்கே எங்கே
ஐயகோ..ஐயகோ..ஓஓ..ஓ (2)
** Note: பூ = பூலோகம்
No comments:
Post a Comment