Tuesday, May 19, 2020

276. சொர்க்கத்தை (சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்) **



சொர்க்கத்தைக் காட்டிச் சென்ற சாயி
பிரிவுத் துன்பத்தில் வாடுதுந்தன் சேயே 
(1_SM+1)
மாளிகை மண்ணும் பொன்னும் ஸ்வாமீ 
உந்தன் கைதரும் நீறின்-முன்னே தூசே
சொர்க்கத்தைக் காட்டிச்சென்றசாயி பிரிவுத் துன்பத்தில் வாடுதுந்தன் சேயே
(MUSIC)
பக்கத்தில் வந்து நின்று பரிவினைக் கொடுத்து
அங்கி தவழப் பஞ்சுப் பாதங்கள் எடுத்து 
மெல்ல நடந்துஉந்தன் தரி..சனம்கொடுத்து 
ஐயா வந்து-தருவாயே கண்ணுக்கு விருந்து 
சொர்க்கத்தைக் காட்டிச்சென்றசாயி பிரிவுத் துன்பத்தில்வாடுதுந்தன் சேயே
பிரிவுத் துன்பத்தில் வாடுதுந்தன் சேயே.. துன்பத்தில் வாடுதுந்தன் சேயே
 (MUSIC)
கன்னத்தில் சின்னப்பரு கண்-த்ருஷ்..டிப் பொட்..டு
கொள்ளை அடித்ததெந்தன் நெஞ்சை யப்போது 
அன்னைக்கு ஈடுகொண்ட நெஞ்சத்..திலன்போடு 
அய்யா -உலகத்தில் வந்தளிப்பாய் ப்ரேமை இப்போது
சொர்க்கத்தைக் காட்டிச்சென்றசாயி பிரிவுத் துன்பத்தில்வாடுதுந்தன் சேயே
  (MUSIC)
உள்ளத்தில் பாசம்கொண்டு சேவைகள் புரியும் 
ஸ்வாமியுன் வார்த்தைஇன்று பாருக்குப் புரியும் 
ஞாலத்தின் தந்தை என்று தர்மத்தை அணைக்கும் (2)
நல் உண்மையின் ரூபம்உன்னில் ப்ரேமையே.. இனிக்கும் 
சொர்க்கத்தைக் காட்டிச்சென்றசாயி பிரிவுத் துன்பத்தில்வாடுதுந்தன் சேயே
பிரிவுத் துன்பத்தில்வாடுதுந்தன் சேயே 
சா..யிராம் சா..யிரா..மரா..மா…ஆ.. (3) (Fade out)
  






No comments:

Post a Comment