Sunday, May 10, 2020

231. வாராததுமேனோ (வாராதிருப்பாரோ) **



விருத்தம்
நித்தம் உலகறிய அற்புதங்கள் பல புரிய
சத்தை இனித்தளிக்க வேண்டிடும்-கண் பூத்திருக்க 
Short Music (Shenoi)
வாராததுமேனோ ப்ரேமசாயி மீண்டுமுடன்
தேற்றாததுமேனோ தத்தளிக்கும் உள்ளம்-தனை 
(2)
(MUSIC)
கண்ணிரண்டில் அருள்சுரந்து... அன்பு என்னும் நல்விருந்து
மண்ணுலகில் தருவதற்கு சாயிநெஞ்சம் இளகலையா
சாயி நெஞ்சம் இளகலையா
வாராததுமேனோ ப்ரேமசாயி மீண்டுமுடன்
தேற்றாததுமேனோ தத்தளிக்கும் உள்ளம்-தனை 
( MUSIC )
பக்கத்தில் நடந்துவந்து... கையோடும் நீரளிக்க
எண்ணாமல் தனிமையிலே உட்கார்ந்ததேன்-இறைவா
உட்கார்ந்ததேன்-இறைவா
(Short Music)
வாராததுமேனோ ப்ரேமசாயி மீண்டுமுடன்
தேற்றாததுமேனோ தத்தளிக்கும் உள்ளம்-தனை 
( MUSIC )
ஆசைஎன்ற பள்ளியிலே கற்றுவந்த மானிடர்க்கு
சேவைஎன்ற பள்ளியிலே ஞானஒளி தந்தவனே 
ஞானஒளி தந்தவனே
 (Short Music)
வாராததுமேனோ ப்ரேமசாயி மீண்டுமுடன்
தேற்றாததுமேனோ தத்தளிக்கும் உள்ளம்-தனை
(2)






No comments:

Post a Comment