சத்தியரூபத்தில் லோகத்திலேஅன்று யார்வந்தவனோ
வந்துகட்டுதிட்டமின்றி நெஞ்சக்கருணையை யார்தந்தவனோ
(2)
யார்வந்தவனோ யார்-தந்தவனோ
(Music)
பக்தர்அழைத்துவரத் தங்கத் தேரினில் வந்தானே (2)
விண்ணகம்விட்டுநம் மண்ணகம் வந்துநல்
சேவைபுரிந்தானே தரி சனம்கொடுத்தானே
சத்திய ரூபத்தில் லோகத்திலே அன்று வந்தவனும்சாயி
வந்து கட்டுதிட்டமின்றி நெஞ்சக்கருணையைத் தந்தவனும்சாயி
புட்டபர்த்திசாயி அவன் த்வாரகையின்மாயி
(Music)
கற்றுத் தெளிந்திட பல்கலைக் கழகம் பூமிக்களித்தவனே
எங்கும் சுட்டு எரிக்கின்ற வெப்பக் கொடுமைக்கு நீரை அளித்தவனே
(2)
நெஞ்சம் முட்டும் கருணையில் வந்து தரிசனம் தந்து மகிழ்ந்தவனே
அவன்அள்ளிக்கொடுத்ததை மீண்டும்கொடுத்திட மண்ணில் வருவானோ
மண்ணில் வருவானோ சாயி மீண்டும் வருவானோ
சத்தியரூபத்தில் லோகத்திலேஅன்று யார்வந்தவனோ
வந்து கட்டுதிட்டமின்றி நெஞ்சக்கருணையை யார்தந்தவனோ
(Music)
கன்னலென அவன் சொல்லும் ஒருமொழி தேனில் குழைத்ததுவோ
வந்து மண்ணில் தரிசனம் சின்னத் தவழ்நடை தன்னில் தருபவனோ
(2)
ஒளி மின்னிவரும் அவன் கையில்வரும் திரு நீறைஅளிப்பவனோ
அவன் வந்திடும் நாளுக்கு ஏங்கிடும் எங்களின் ஏக்கத்தைத் தீர்ப்பனோ
அவன் வந்திடும் நாளுக்குமே மனம் ஏங்கிடுதேதினமே
ஓ..ஓ..ஓ..ஓ..
சத்திய ரூபத்தில் லோகத்திலே அன்று வந்தவனும்சாயி
வந்து கட்டுதிட்டமின்றி நெஞ்சக்கருணையைத் தந்தவனும்சாயி
புட்டபர்த்திசாயி அவன் த்வாரகையின்மாயி
No comments:
Post a Comment