Friday, May 8, 2020

162. விழிநீரின் ஈரம் (காவேரி ஓரம்) **




விழிநீரின் ஈரம் மறையாத வண்ணம்
நம்சாயி மறைந்தானம்மா மீண்டும் மண் என்று வருவானம்மா
நெஞ்சில் கவியான பாடல் நாம்  பாடும் முன்னே
விண்சென்று மறைந்தானம்மா
என்று அவன் வந்து கேட்பானம்மா
விழிநீரின் ஈரம் மறையாத வண்ணம்
நம்சாயி மறைந்தானம்மா மீண்டும் மண் என்று வருவானம்மா
(Music)
பொருள்வேண்டவில்லை புகழ் வேண்டவில்லை
முகம் காண வருவாயம்மா
உந்தன் பதங்கள் மண்மேலே நடக்கின்ற நாளே
எம் வாழ்வில் திருநாளம்மா
எங்கள் விழியோடும்  நீர் காணம்மா
வந்து பரிவாகத் துடைப்பாயம்மா
எங்கள் கனிவான சாயி இசைகீதம் கேட்டு
விரைவாக வருவாயம்மா
எங்கள் துயர் தீர்க்க வா சாயிமா
 (Short Music)
விழிநீரின் ஈரம் மறையாத வண்ணம்
நம்சாயி மறைந்தானம்மா மீண்டும் மண் என்று வருவானம்மா
(Music)
அழியாத பாதை அமைத்தாயே சாயி அதைமீண்டும் நீகாட்ட வா
வாழ்வில் கனிவான நெஞ்சில்பணிவோமே உன்தாள்
மனம் மாறி வருவாயம்மா
கொஞ்சும் மொழிபேச புவி மீது வா
கெஞ்சும் சேய்க்காக தாயேநீ வா
எங்கள் துயரோடும் வாழ்க்கை முடிவாகும் முன்னே
முகம்காண அவதாரம்தா மீண்டும் மண்மீது வாசாயிமா
விழிநீரின் ஈரம் மறையாத வண்ணம்
நம்சாயி மறைந்தானம்மா மீண்டும் மண் என்று வருவானம்மா





No comments:

Post a Comment