பௌர்ணமி நிலவை பனிக்குளிர் இதத்தை
ஸ்வாமியின் முகத்தில் காண்போமா
சாந்தத்தின் பொழிவை மயக்கத்தின் விடிவை
அவர்-விழியாலே பார்ப்போம் வா
(SM)
பௌர்ணமி நிலவை பனிக்குளிர் இதத்தை (2)
ஸ்வாமியின் முகத்தில் காண்போமா
சாந்தத்தின் பொழிவை மயக்கத்தின் விடிவை (2)
அவர்-விழியாலே பார்ப்போம் வா
அவர் வடிவாகப் பார்ப்போம் வா
(MUSIC)
ஈசன் பெயர்-கொள் நாவினிலே
பாசம் தனைக்கொள் வாழ்வினிலே
சேவை கரம்-கொள் என்பதுவே-நம்
சாயி பெருமான் சொன்னதுவே
என்றும் அதுதான் மறைபோல்
எவர்க்கும்
உய்யும் வழியைத் தானாய்க்
கொடுக்கும்
வையம் முழுதும் குடும்பம்
உனக்கு
அன்பில் இதயம் இணையும்
பொழுது
என்றாகவே நல்-வழிசாயிராம்
தந்தாரதே-நம் வழியாகுமாம்
(MUSIC)
அன்பைத் தரும்-நல் தாய்-வடிவில்
பாசம் தரும்-தந்..தை வடிவில்
உய்தல்-அளிக்கும் குரு-வடிவில்
நிற்பான்-சாயி நம் எதிரில்
ஐயோ பிறவி சுழல்-போல் வருது
அய்யா உதவி வருமோ எனக்கு
என்றே மனமும் கணமும் தவிக்க
தஞ்சம் கொடுத்தே அன்பாய்
அணைக்க
வந்தார்-இகம் அன்..புருவாகத் தான்
தந்தார் இதம் நம் குரு-சாயிராம்
(BOTH)
பௌர்ணமி நிலவை பனிக்குளிர் இதத்தை
ஸ்வாமியின் முகத்தில் காண்போமா
சாந்தத்தின் பொழிவை மயக்கத்தின் விடிவை
அவர்-விழியாலே பார்ப்போம் வா
அவர் வடிவாகப் பார்ப்போம் வா
No comments:
Post a Comment