Tuesday, September 10, 2024

660.ப்ரம்மா சாயி(வசந்தத்தில் ஓர் நாள்) **

ப்ரம்மா சாயி  
விஷ்ணுவும் சாயி 
ஸ்ரீ சாயி சிவ பெருமானே சாயி தேவாதி தேவ பிரானே
(SM)
ப்ரம்மா சாயி  விஷ்ணுவும் சாயி 
ஸ்ரீ சாயி சிவ பெருமானே சாயி தேவாதி தேவ பிரானே
சாயி தேவாதி தேவ பிரானே
(MUSIC)

மெய்கொண்டு-மெய்யே பார்தனில் வாழ (2)
அன்புடல் தரித்து வந்தாரே சாயி 
மானிட-நாடகம் உலகெனும் மேடை
ப்ரேமையின் நாடகம் உலகெனும் மேடை
தனில்-எழ நடத்திச் சென்றாரே சாயி
(SM)
அடடா-அந்நாள் திரும்பிடக் கண்ணால் (2)
கண்டு நம் மெய் சிலிர்ப்போமா 
சாயி என்றே கண் பனித்திருப்போமா 
சாயி  தரிசனத்..தால்-களிப்போமா 
ப்ரம்மா சாயி  விஷ்ணுவும் சாயி 
ஸ்ரீ சாயி சிவ பெருமானே சாயி தேவாதி தேவ பிரானே
(MUSIC)

*பொன்வண்ணம் தானே என்றாகும்-தாயின் (2)
இன்-மடி சேர்ந்திருப்போமா-சாயி 
(SM)
என்றே-நெகிழ்வோடு கூறுவதாலே (2)
பிறப்பற வாழ்ந்திருப்போமா சாயி
 அருகே சென்று அன்பே என்று (2)
அவர் குரல் கேட்டிடுவோமா 
சாயி என்றாடிப் பாடிடுவோமா (2)
ப்ரம்மா சாயி  விஷ்ணுவும் சாயி 
ஸ்ரீ சாயி சிவ பெருமானே சாயி தேவாதி தேவ பிரானே
சாயி தேவாதி தேவ பிரானே




 

No comments:

Post a Comment