விண்ணில் இருக்கும் ஆண்டவனே இன்று மண்ணில் பிறந்த சாயி பிரான் (2)
கலியில் உலகைக் காத்திடவே இன்று பாரில் உதித்த நம் பெருமான் (2)
-அன்பைத் தர இந்த புவிதனிலே இன்று மண்பால் உதித்த சாயி பிரான் (2)
-சேவை புரிய பாரில் உதித்த ப்ரேமை வடிவம் நம் பெருமான் (2)
-அன்பைத் தர இந்த புவிதனிலே..
(MUSIC)
பொன்னின் நிகர் எந்தன் கண்ணே என்னருகில் வா வா கண்ணே (2)
-என்றுரைத்துத் தந்தார் அன்பே தந்தை உள்ளம் எல்லாம் அன்பே (2)
நம்மிடத்தில் வந்தார் அன்றே நம்மைத்-தம்மில் கொண்டார் நன்கே (2)
-நம்மிதயம் சென்றார் அன்றே கோயில்.. அதில் கொண்டார் நன்கே (2)
விண்ணில் இருக்கும் ஆண்டவனே இன்று மண்ணில் பிறந்த சாயி பிரான்
-சேவை புரிய பாரில் உதித்த ப்ரேமை வடிவம் நம் பெருமான்
விண்ணில் இருக்கும் ஆண்டவனே
(MUSIC)
கை சுழற்றித் தந்தார் நீறே கங்கை என்றளித்தார் நீரே (2)
-கொண்டவர்-கண் கொண்டார் நீரே சொர்க்கம் தன்னைக் கண்டார் நேரே (2)
வெட்கம் என்ன என்றார் பாரே வேண்டியதைத் தந்தார் பாரேன் (2)
-இன்னும் கொஞ்சம் இந்தா என்றே அன்பைக் கொண்டார் வேண்டார் வேறே (2)
விண்ணில் இருக்கும் ஆண்டவனே இன்று மண்ணில் பிறந்த சாயி பிரான்
-சேவை புரிய பாரில் உதித்த ப்ரேமை வடிவம் நம் பெருமான்
விண்ணில் இருக்கும் ஆண்டவனே
No comments:
Post a Comment