Wednesday, December 29, 2021

575. எத்த..னை-முறை(முத்து நகையே)

SAI Geetham 575
எத்த..னை-முறை ஐய்யே நானழுவேன் ..சாயீ ..சாயீ 
கத்தும்-குரலை அய்யே செவி-மடுப்பாய் நேரே எழுந்தருள்வாய்
(1+Short Music+1+Music)

தினமும் நானும் பாடும் பாட்டில் உன்மனம்-இறங்கவில்லையே 
உலகில் நீயும் வந்த நல் சேதி இன்னமும்-கிடைக்கவில்லையே 
எத்த..னை-முறை ஐய்யே நானழுவேன் ..சாயீ ..சாயீ 
(MUSIC)

தன்-உதிரம் பாலாய் தாய் கொடுத்தாள் -
என் குரலை-அன்பாய் செவி மடுத்தாள்
(2)
என்-தகப்பன் வாழ அறிவளித்தார்
நீ தான் எனை-என்றும் அழ வைத்தாய்
எத்த..னை-முறை ஐய்யே நானழுவேன் ..சாயீ ..சாயீ 
கத்தும்-குரலை அய்யே செவி-மடுப்பாய் நேரே எழுந்தருள்வாய்

(MUSIC)
இன்னும்-ஒரு பாப்பா நான்-உனக்கு
தூக்கி எடு வா வா ஏன் பிணக்கு
(2)
என் அழுகை கேட்பாய்… 
(Short music)
என்னழுகை கேட்டே நீ எனக்கு
நேரே வந்தருளை-வழங்கு
(2)
எத்த..னை-முறை ஐய்யே நானழுவேன் ..சாயீ ..சாயீ 
கத்தும்-குரலை அய்யே செவி-மடுப்பாய் நேரே எழுந்தருள்வாய்
நேரே .. எழுந்தருள்வாய்

சாயி கீதம்-6

முதல்பக்கம்

No comments:

Post a Comment