அறியாயோ உன்-சேயின் இதயத்தையே
நீ வாராயோ என் சாயி கீதத்திலே
என் பண்தான்-நான் ஒரு-பூஜை என்றிருந்தேன் (2)
என் விழிநீரால் அபிஷேகம் செய்திருந்தேன் (2)
அறியாயோ உன்-சேயின் இதயத்தையே
நீ வாராயோ என் சாயி கீதத்திலே
(MUSIC)
உலகினில் உனைப்-பார்க்க நான்-ஏங்க
பால் அலை-கடல் சென்றாயோ நீ-தூங்க
உன்-செயல் சரிதானோ முறைதானோ (2)
துயர் துன்பமெல்லாம் உனக்கு விளங்காதோ
அறியாயோ உன்-சேயின் இதயத்தையே
நீ வாராயோ என் சாயி கீதத்திலே
(MUSIC)
உதிரவை உன்-கையின் நீறினையே
அதில் கழியவை நோயாகும் என்-வினையை
(2)
சேய்மனம் அன்னைக்குத்தான் புரியாதோ
அது தாய் முகம் கண்டுவிட்டால் சிரிக்காதோ (2)
தாய் முகம் கண்டுவிட்டால் சிரிக்காதோ
அறியாயோ உன்-சேயின் இதயத்தையே
நீ வாராயோ என் சாயி கீதத்திலே
(MUSIC)
உலகினில் உன்-முகம் தினம்-கண்டு
அதில் மாபெரும் ஆனந்தம் தான்-கொண்டு
இருப்பது சதமெனும் நினைப்பின்று
வீண் பகல்வரும் கனவென ஆனதின்று +ஆ.ஆ..
(MUSIC)
சத்தியம் என்பது உன் வாக்கு உன்
சித்தத்தின் போக்கோ சிவன் போக்கு
(2)
யாருக்குப் புரியும் அது உனைத் தவிர (2)
எந்தனுக்கேது அத்-திறமும் (2)
No comments:
Post a Comment