Saturday, May 30, 2020

382. என்னுயிர் போல் நீ(என்னுயிர்த் தோழி கேளொரு சேதி) **




என்னுயிர் போல்நீ இருந்தனைசாயி ஏன்போனாயோ சீக்கிரமேநீ (2)

என்னுயிர் போல்நீ இருந்தனைசாயி

அன்னையைப்போலே மன்னுயிர்காத்தாய் ஏன்போனாயோநீ சாயி

என்னுயிர் போல்நீ இருந்தனைசாயி ஏன்போனாயோ சீக்கிரமேநீ (2)

(MUSIC)

அறிவுறப் பயின்றேன் அறிவியல் பயின்றேன்.. ஆஆ

அறிவுறப் பயின்றேன் அறிவியல் பயின்றேன்

ஏட்டுச் சுரை எனும் கல்வியைப் பயின்றேன்

மனதினில் கணக்கைப் போட்டு முடித்தேன்

உன் புதிர்க் கணக்கில் நான் ஏமாந்தேன்

 என்னுயிர் போல்நீ இருந்தனைசாயி ஏன்போனாயோ சீக்கிரமேநீ

ஏன்போ..னா..யோ சீக்கிர..மேநீ

(MUSIC)

என்றே..னும்-உன் குரல்-கேட்பேனோ

உலகினில்-உன்திரு முகம்-பார்ப்பேனோ 

என்று பாவி-நான் தவிப்பது வீணோ  

என்றுநீ-சாயி செவி மடுப்பாயோ

என்னுயிர் போல்நீ இருந்தனைசாயி ஏன்போனாயோ சீக்கிரமேநீ (2) 



No comments:

Post a Comment