Saturday, May 30, 2020

353. என்று ப்ரேம சாயிரூபம் (இதய வீணை தூங்கும்போது) **




என்று-ப்ரேம சாயிரூபம் வந்து உதிக்குமோ 
எனது-கண்கள் அதனைக்கண்டு மகிழ்ந்து துதிக்குமோ 
என்று-ப்ரேம சாயிரூபம் வந்து உதிக்குமோ…
(MUSIC)
உதடு சுழிக்குமழகைக் கண்கள் காணுமோ 
அன்பின் மனித ரூ..பம் பாரில்  தோன்றுமோ
(2)
விளக்கம் கொடுப்பதனால்  துயரம் போகுமோ  (2)
 காட்டுத் தீயை ஊதி ஊதி அணைக்க முடியுமோ
அணைக்க முடியுமோ
என்று-ப்ரேம சாயிரூபம் வந்து உதிக்குமோ 
எனது-கண்கள் அதனைக்கண்டு மகிழ்ந்து துதிக்குமோ 
என்று-ப்ரேம சாயிரூபம் வந்து உதிக்குமோ
 (MUSIC)
தினமும்-சாயி உனையே நான்-நினைத்துத்-தன்னாலே 
பொல பொலவெனக்கண்…ணீர்உகுத்து உருகுகின்றேனே
(2) 
உருகும் நெஞ்சம் உனக்குப் பிடிக்கும் என்பதனாலே (2) 
தினமும் அழுது அழுது என்னை உருக வைத்தாயோ     
உருக வைத்தாயோ    
என்று-ப்ரேம சாயிரூபம் வந்து உதிக்குமோ 
எனது-கண்கள் அதனைக்கண்டு மகிழ்ந்து துதிக்குமோ 
என்று-ப்ரேம சாயிரூபம் வந்து உதிக்குமோ
 (MUSIC)
உருகி அன்பை அளித்திடவே இனி யாரு 
உடைந்த நெஞ்சைத் தேற்றிடவே வேறாரு 
அழுத கண்ணைத் துடைத்திடவே இங்கு யாரு 
இனி உலகில் பெருகிடுமே கண்ணீர் ஆறு
என்று-ப்ரேம சாயிரூபம் வந்து உதிக்குமோ




No comments:

Post a Comment