Friday, May 29, 2020

320. காயும்-மாயம் போக்கிட(போயும் போயும் மனிதனுக்கிந்த)**

காயும்-மாயம் போக்கிட-மனித காயத்தில்-உதித்தானே 
இறைவன் லோகத்தில் உதித்தானே    
அவன் மெய்யும் அன்பும் மெய்யாய்க் கொண்ட சாயிபிரான் தானே
சத்ய சாயிபிரான் தானே
காயும்-மாயம் போக்கிட-மனித காயத்தில்-உதித்தானே
(MUSIC)
கண்கள் இரண்டில் கருணை தரும் 
அவன் மொழியினில் தேனே வழிந்து வரும்
(2)
உள்ளத்தில் அன்பே நிறைந்திருக்கும் 
அது இடையற  நமக்கே பொழிந்திருக்கும்
தாயாய்ப் புவியில் இருந்தநம் சாயி தந்தையு மானானே 
சாயி தந்தையு மானானே 
இந்தப் பாரில் அதற்கே ஆண்டவன் சாயி சேயெனப் பிறந்தானே
நமக்கு  சகலமும் ஆனானே
காயும்-மாயம் போக்கிட-மனித காயத்தில்- உதித்தானே
(MUSIC)
நம்முடனேஅவன் உலவியதால் ஒருமனிதன் என்றேஎண்ணுவதா (2)
என்புட..னேஉருவாகியதால் சிவம் பவமயமானிட மாயிடுமா 
காயும்-மாயம் போக்கிட-மனித காயத்தில்- உதித்தானே
இறைவன் லோகத்தில் உதித்தானே    
அவன் மெய்யும் அன்பும் மெய்யாய்க் கொண்ட சாயிபிரான் தானே
சத்ய சாயிபிரான் தானே
காயும்-மாயம் போக்கிட-மனித காயத்தில்-வந்தானே

No comments:

Post a Comment