Saturday, May 9, 2020

175. கண்ணில் கண்டு நாம் ஆட (உன்னைக் கண்டு நான் ஆட) **



கண்ணில்-கண்டு நாம்ஆட நெஞ்சில்கொண்டு நாம்பாட
ஆகாசம் விட்டு மண்ணில் வந்தான்சாயி
பாரெங்கும் முனிவர்  ஞானத்தில் நினைந்து
அவதாரம் நிகழ்ந்ததடா (2)
(MUSIC)
எண்ணத்தில் மின்னும் வண்ணம் நிறைகின்ற சாயி
கிண்ணத்தில் அமுதம்தந்த திருமாலும்சாயி
(2)
கண்டத்தில் விடம்கொண்ட சிவன்தான் சாயி
(Short Music)
கண்டத்தில் விடம்கொண்ட சிவன்தான் சாயி
எழுத்தில் இனிநான் என்னென்று சொல்வேன்
வல்லமையாவும் சொல்லிடப்பண்ணில்  யுகம்கோடி யாகுமடா
யுகம்கோடி யாகுமடா
(MUSIC)
சித்தினில் சுடர்போலே உதிக்கும் சான்றோர்க்கு
தீயதை நில்லாமல் அழித்திடும்காப்பு
(2)
முக்தியின் வழிசொல்லும் பாதத்தின்சிறப்பு
(Short Music)
முக்தியின் வழிசொல்லும் பாதத்தின்சிறப்பு
இகமும் பரமே ஏதந்த   தவிப்பு
மின்னொளி வீசும் தன்னொளி கண்டால் வேறென்ன வேணுமடா
வேறென்ன வேணுமடா 
(Short Music)
கண்ணில் கண்டு நாம் ஆட நெஞ்சில் கொண்டு நாம் பாட
ஆகாசம் விட்டு மண்ணில் வந்தான் சாயி
பாரெங்கும் முனிவர்  ஞானத்தில் நினைந்து
அவதாரம் நிகழ்ந்ததடா  (2)






No comments:

Post a Comment