Saturday, May 9, 2020

172. சாயி என்றொரு (உறவு என்றொரு சொல்லிருந்தால்)

விருத்தம்
“பழகி வந்த உன் உருவம்  பூமியிலே முடிந்தாலும்
செதுக்கி  வைத்த ஓவியம் போல் இருக்கின்றாய் இதயத்தில் நீ”
(MUSIC)
சாயிஎன்றொரு சொல்லிருந்தால் இறைவன்என்றொரு பொருளிருக்கும்
சாயிஎன்றுநீ சொல்லுவதால் இறையைஅறிந்திடும் வழிபிறக்கும்
(MUSIC)
(2)
இதயம்தனில்அவன் நினைவிருந்தால்
இருட்டு அதன்வசம் எங்கிருக்கும்
 பக்திசேவை பாதைசென்றால் 
முக்தி என்றொரு ஊர் போகும் 
 சாயிஎன்றொரு சொல்லிருந்தால் இறைவன்என்றொரு பொருளிருக்கும்
சாயிஎன்றுநீ சொல்லுவதால் இறையைஅறிந்திடும் வழிபிறக்கும்
(MUSIC)
உருவம் கொண்டவன் வருவதனால்
மனிதன் என்றொரு நினைப்பிருக்கும்
பழகி அவன்வசம் நீசென்றால்
இறைவன் என்பது புரிந்துவிடும் 
சாயிஎன்றொரு சொல்லிருந்தால் இறைவன்என்றொரு பொருளிருக்கும்
சாயிஎன்றுநீ சொல்லுவதால் இறையைஅறிந்திடும் வழிபிறக்கும் 

No comments:

Post a Comment