(விருத்தம்)
உலகினில் துணை-வந்து இறை-என்று
திகழ்கின்ற தூயவன் சாயிராமன்
(MUSIC)
அலைந்திடும் மனம்-சென்று பயம்-போக
பலம்-தந்த சத்தியம் சாயிராமன்
கருணையின் மனம்கொண்டு அருள்தந்த
விரைபொருள் இறைவனே சாயிராமன்
புவி-மிசை நாடகம் நித்தமும் ஆடிடும் சிவசக்தி சாயிராமன்
(MUSIC)
துடிக்கின்ற மனம்ஓங்க அருட்காட்சிதருகின்ற
தெய்வமும் சாயிராமன்
(MUSIC)
அவ..னடியொற்றி பொடிபூசி இசையோடு மனமுருகி
நாளும் பண்கொண்டு பாட
(MUSIC)
நீறினைத் தந்தானடி சாயி
(MUSIC)
நீறினைத் தந்தானடி சாயி
பக்தியிலே எழுந்த பாட்டினிலே மகிழ்ந்து
நீறினைத் தந்தானடி சாயி
(2)
மானிடத்தின்....
வேஷத்திலே...
வந்தவனோர்...
தெய்வமென...
மானிடத்தின் வேஷத்திலே வந்தவனோர் தெய்வமென
நீறினைத் தந்தானடி சாயி
(MUSIC)
செந்தமி..ழில்சாயி கீதம்தனை
ஐய்யன் தாள்-பணிந்தே நாங்கள் பாடிடவே
(SHORT MUSIC)
செந்தமி..ழில்-சாயி கீதம்தனை
ஐய்யன் தாள்-பணிந்தே-நாங்கள் பாடிடவே
சாயிபிரான் என்னும் நாமத்தையே (2)
துளி அப்பழுக்கு இல்லையெனும் நெஞ்சினிலே பாடிடவே
நீறினைத் தந்தானடி சாயி
பக்தியிலே எழுந்த பாட்டினிலே
மகிழ்ந்து
நீறினைத் தந்தானடி
(MUSIC)
பாடிய அன்பினில் தன்மனம் கரைந்திட
பாடிடும் நெஞ்சினில் பக்தியைக் கூட்ட-அருள்
நீறினைத் தந்தானடி சாயி
(ஜதி )
ச ரி க ம ப த நி .. சரிகமபதநி
உரமுறு மதியொடு பாவம்-போக தூய-நெஞ்சம் மேலுறவே நீறினைத் தந்தானடி
( ஜதி )
நெஞ்சில்கருணை கடலெனபெருகிட பாடும்மனமும் களிப்பினில்திளைத்திடவே
நீறினைத் தந்தானடி
( ஜதி )
மனமலர் அலர்ந்திட பவவினை களைந்திட திருவடி
அருள்தர
அவன்-மனம் கனிந்திடவே
நீறினைத் தந்தானடி ….... ஈ..ஈ..
( ஜதி )
தித்திப்பாம்-அவன் அன்பின்-எண்ணம் பர்த்தி-பிரானவன் தெய்வச்-சின்னம்
( ஜதி )
தங்கம்போல் அவன்பாதம் மின்னும் முத்தும்-நாணிட
ஒளி தரும் வண்ணம்-நம் சாயிராம்
(Music ) + ( ஜதி )
விரைவினில் நீ நீ ..
பத மலர் தா..தா
கனிந்திடப்பா...பா
சாய்ராமா...மா
துயர்எமக்கா...கா
விரைவினில்நீ பதமலர்தா கனிந்திடப்பா சாய்ராமா எமைக்காப்பாய்
நீ..
தா.. பா.. மா.. கா..
நீ தா பா மா கா
நிதபமக
ச..சத்திய வடிவா..( ஜதி )
ரி..ரிதம்பரம் தரவா.. ( ஜதி )
க.. கணங்களின் தலைவா.. ( ஜதி )
ம..மனமுறை இறைவா. ( ஜதி )
ப..பரம்பொருள் பாபா..த..தந்திடவே வா..நி..நினைப்பினில்
நீ வா.,.
நாளும் புவி மீதில் தினம் பாதம் நடமாடும் படி வாராய் அருள் தாராய்
( ஜதி )
நாளும் புவி மீதில் தினம் பாதம் நடமாடும் படி வாராய் அருள் தாராய்
அருள் முகம் தினம் புவி தனில் இருக்கையில்
இனி ஒரு துயரமும் இலையெனவே ... நீறினைத் தந்தானடி
( ஜதி )
No comments:
Post a Comment