Sunday, May 7, 2017

424. அன்பென்னும் பேரெடுத்து(தெய்வத்தின் தேரெடுத்து) **



விருத்தம்
கற்பனைக்கு எட்டிடுமோ சாத்திரத்தில் அடங்கிடுமோ 
சாத்திரமும் சூத்திரமும் சொல்லிடுமோ அவன்-முழுதை
_______________________________________

அன்பென்னும் ஊற்றெடுத்த ப்ரேமையின் ஆறு 
சாயிக்கு ஈடு-சொல்ல வேறிங்கு யாரு 
(2) 
(MUSIC)
மாயத்திலாழ்த்தும் பிறப்பெனும் வ்யாதி 
விலக்கிடும்-சாயி சைதன்ய ஜோதி 
(2)
உயிர்களெல்லாம்-அவன் பாதியில் பாதி (2)
எளிதில் விளங்கிடுமா அவன்-அநுபூதி.. அவன்-அநுபூதி
 அன்பென்னும் ஊற்றெடுத்த ப்ரேமையின் ஆறு 
சாயிக்கு ஈடு-சொல்ல வேறிங்கு யாரு 
(MUSIC)
சாத்திரமும்-ப்ரம்ம சூத்திர..மும்-முயன்று 
வியர்த்து-களைத்தம்மா சொல்லிட முனைந்து   
பாரினில் சொந்தமென்று வந்தது பிறப்பு  
ப்ரேமையின் மொத்தமன்றோ சாயிராம்-சிறப்பு சாயிராம் சிறப்பு 
அன்பென்னும் ஊற்றெடுத்த ப்ரேமையின் ஆறு 
சாயிக்கு ஈடு-சொல்ல வேறிங்கு யாரு 
(MUSIC)
கம்பனின் காவியம்-பார் அவன்-ஒரு அம்சம்
கவி-காளி தாசனின்-சொல் அது-ரகு வம்சம் 
(2)
சொன்னதெல்லாம் கொஞ்சம் அறிவினை மிஞ்சும் (2)
அவன்-புகழ் சொல்வதற்கே வார்த்தைக்குப் பஞ்சம் (2)
 அன்பென்னும் ஊற்றெடுத்த ப்ரேமையின் ஆறு 
சாயிக்கு ஈடு சொல்ல வேறிங்கு யாரு 



No comments:

Post a Comment