Sunday, April 30, 2017

99. உன்னையன்றி வேறு (உன்னை ஒன்று கேட்பேன்)***



உன்னையன்றி வேறு தெய்வம்ஏது சாயி
என்னைக்காக்கும் நல்ல  அன்னையாகும் சாயி..
அன்னையாகும் சாயி
உன்னையன்றி வேறு தெய்வம்ஏது சாயி
என்னைக்காக்கும் நல்ல  அன்னையாகும் சாயி
(Music)
பேதம் அற்றநெஞ்சில் அன்புகாட்டும் சாயி(2)
தாலாட்டிக் காக்கும் அன்னையாகும் சாயி
உன்னையன்றி வேறு தெய்வம்ஏது சாயி
என்னைக் காக்கும் நல்ல  அன்னையாகும் சாயி
(Music)
நிலையிலா மாற்றம் நேரில்லா நெஞ்சம்
கூசாத பொய்கள் நிறைந்ததே லோகம்
இந்தலோகம் தன்னில் வந்திருக்கும் சாயி
நம்மைக் காக்க-ன்றி வெறெதற்கு-யோசி   
உன்னையன்றி வேறு தெய்வம்ஏது சாயி
என்னைக் காக்கும் நல்ல  அன்னையாகும் சாயி
 (Music)
முனிவனின் ஞானம் சாதுவின் மௌனம்
இசையிலே ராகம் உயிரிலே நேசம்
இவையெலாம் யாரு என்றுகொஞ்சம் யோசி
விளங்கத் தோன்றும்சாயி அதுவும் அவன் ஆசி
உன்னையன்றி வேறு தெய்வம்ஏது சாயி
என்னைக் காக்கும் நல்ல  அன்னையாகும் சாயி
அன்னை..யாகும் சாயி




No comments:

Post a Comment