கலங்கிடாமல் உயிர்களையே சாயி
தாவி அணைத்துக்கொள்ளும் கருணைதெய்வம் நீயே
(2)
தூற்றிடினும் துறந்திடினும் மனம்மயங்கி மறந்திடினும்(2)
தயங்கிடாமல் காத்துநிற்பாய் நீயே .. தாயே..
கலங்கிடாமல் உயிர்களையே சாயி
தாவி அணைத்துக்கொள்ளும் கருணைதெய்வம் நீயே
(Music)
அன்னையென எங்களையே...யே..யே....
தாலாட்டி வளர்த்தவனே
(2)
பால்வயிற்றில் வார்த்தவனே
நல்மருந்தாய் இருந்தவனே
(2)
கலங்கிடாமல் உயிர்களையே சாயி
தாவி அணைத்துக்கொள்ளும் கருணைதெய்வம் நீயே
(Music)
நாணலெனத் தலைவணங்கும் நல்குணத்தை அளித்தவனே(2)
நாணிநிற்கும் உயிர்களுக்கே நல்லிதயம் தந்தவனே(2)
கலங்கிடாமல் உயிர்களையே சாயி
தாவி அணைத்துக்கொள்ளும் கருணைதெய்வம் நீயே
(2)
கானலிலே குளிரவைத்து அமைதிநெஞ்சில் தந்தவனே(2)
கானம்செய்யும் பஜனையிலேநெஞ்சில்இன்பம்அளிப்பவனே (2)
கலங்கிடாமல் உயிர்களையே சாயி
தாவி அணைத்துக்கொள்ளும் கருணைதெய்வம் நீயே
(Music)
சிந்தையில்-துயரம்வரும் வேளையில்-துவண்டுவிழும் (2)
போதினிலே ஓடிவந்தாய் .. மேதினியில்-அன்புதந்தாய் (2)
கலங்கிடாமல் உயிர்களையே சாயி
தாவி அணைத்துக் கொள்ளும் கருணை தெய்வம் நீயே
தூற்றிடினும் துறந்திடினும் மனம்மயங்கி மறந்திடினும் (2)
தயங்கிடாமல் காத்துநிற்பாய் நீயே .. தாயே..
கலங்கிடாமல் உயிர்களையே சாயி
தாவி அணைத்துக்கொள்ளும் கருணைதெய்வம் நீயே
(both)
No comments:
Post a Comment