Monday, March 21, 2016

41. பூஜைக்குகந்த சாயீ வா (பூஜைக்கு வந்த மலரே வா) ***





பூஜைக்குகந்த சாயீவா பூமிக்குவந்த ஸ்வாமீவா
விண்ணின்று-பூமி மண்ணில்-பிறந்த அன்பான-சாயி பாபா-வா
பூஜைக்குகந்த சாயீவா பூமிக்குவந்த ஸ்வாமீவா
ஓ.......
விண்ணின்று-பூமி மண்ணில்-பிறந்த அன்பான-சாயி பாபாவா
(Short Music)
மலர்போன்ற-நெஞ்சத் தலைவா வா
வினை களைய வந்த அருளே-வா .. ஓ.......
கையின்று அன்பில் நீறைச் சொரிந்து நோய்தீர்க்கும் எங்கள் இறையே-வா 
(Music)
அ.....ஓ....... அ.....
ஆ ..

மூடநெஞ்சினில் இருளை இருளை ஒளியே ஒளியே நீக்கவா
வாடும் நெஞ்சினில் துயரைத்-துயரை விரைவில் விரைவில் நீ களைவாய்
அன்பு நெஞ்சில்-நீ அவதரித்தது ஷிரிடிசாயி உன் முதல்வரவு
யாவர் காணவும் உண்மை வடிவிலே இங்கு திரும்பவும் உன்வரவு 
மலர்போன்ற-நெஞ்சத் தலைவா-வா வினைகளையவந்த அருளே-வா
கையின்றுஅன்பில் நீறைச்சொரிந்து நோய்தீர்க்கும்எங்கள் இறையே-வா 
(Music)
அ.....ஓ....... அ.....
தந்துச்சிவந்த கரமோ-கரமோ பவளம்-பவளம் செம்பவளம் 
வாயில்கூறிய மொழியோஇனித்த மதுரம்மதுரம் தேன்-மதுரம்
அன்பலர்ந்தது நெஞ்சில்வந்தது மலருமானது உன்முகமே
இந்த பூமியில் நாளும் சாயி-உன் லீலை  செய்திடும் நாடகமே
மலர்போன்றநெஞ்சத் தலைவா வா வினைகளையவந்த அருளே வா
கையின்றுஅன்பில் நீறைச்சொரிந்து நோய்தீர்க்கும்எங்கள் இறையே-வா 
பூஜைக்குகந்த சாயீவா பூமிக்குவந்த ஸ்வாமீவா
விண்ணின்றுபூமி மண்ணில்பிறந்த அன்பானசாயி பாபாவா


No comments:

Post a Comment