Monday, May 8, 2017

430. நெஞ்சத்தில் வாழ்ந்திருக்கும் (தெய்வத்தின் தேரெடுத்து) ***




விருத்தம்
அன்பு-என்னும் பேரெடுத்து கை சுரக்கும் நீறளித்து  
சாயிபிரான் தந்த-இதம் என்-இதயம் மறக்கவில்லை
________________________

(SM)
நெஞ்சத்தில் வாழ்ந்திருக்கும் சாயி-உன் பேரு 
உன்-முகம் காண்பதொன்றே மாபெரும் பேறு
(2)  
 (MUSIC)
வாழ்க்கைக்குத்-தோணி சாயி-பிரானே
உயர்த்திடும்-ஏணி உன்-பதம் தானே
(2)
வாட்டத்தைப் போக்கிட-வா ப்ரேமையின் ஆறே (2)
பாடி வேண்டுகிறோம் திரும்பிடு-தாயே.. திரும்பிடு-தா..யே
நெஞ்சத்தில் வாழ்ந்திருக்கும் சாயி உன் பேரு 
உன் முகம் காண்பதொன்றே மாபெரும் பேறு
(MUSIC)
நீவிட்டுப் போன-பின்பு வாழ்க்கையில் பிடிப்பு
எனக்கில்லை அறிந்திடுவாய் போதும்-உன் நடிப்பு
ஊழ்வினை போக்கிடய்யா நீ-உடன் இருந்து
தினம்-தினம் தந்திடய்யா தரிசன விருந்து … தரிசன விருந்து
நெஞ்சத்தில் வாழ்ந்திருக்கும் சாயி உன் பேரு 
உன் முகம் காண்பதொன்றே மாபெரும் பேறு
 (MUSIC
என்பினை உருக்குதய்யா பிரிவெனும்-சோகம்
புவி-காண வந்திடு வான் இருந்தது போதும்
(2)
பாரினிலே என்போல் பாவியும்-இல்லை (2)
உனைத்-தினம் காணும் நல்ல பாக்கியம்-இல்லை (2)
நெஞ்சத்தில் வாழ்ந்திருக்கும் சாயி உன் பேரு 
உன் முகம் காண்பதொன்றே மாபெரும் பேறு


No comments:

Post a Comment