Sunday, May 7, 2017

427. நீங்கள் அத்தனை உலகிலும்(நீங்கள் அத்தனை பேரும்) **


நீங்கள் அத்தனை உலகிலும் சல்லடைபோட்டுத் தேடுங்கள் (2) 
எங்கள் சாயிபி..ரான்-போல் ஒருவரைக்-கண்டால் கூறுங்கள்
அவதா..ரம்-பல இறைவன்  கொண்டான் 
பொல்லாதவரை இல்லாதழித்தான் பூமியிலே
ஆனால் அன்பால் நெஞ்சம் தன்னில்-புகுந்..தே 
மாற்றம்-பு..ரிந்த சாயிபோல் உண்டோ பாரினிலே  
நீங்கள் அத்தனை உலகிலும் சல்லடைபோட்டுத் தேடுங்கள் 
எங்கள் சாயிபி..ரான்-போல் ஒருவரைக்-கண்டால் கூறுங்கள்
(MUSIC)
அழகாகத் தோன்றும் அவன் திருக்காட்சிக் கென்றே
பவமாய உய்வளிக்கும் திருநீறுக் கென்றே
விதிமாற்றும் அவன்- திருநாமம் தனைச்சொல்ல வென்றே 
பெரும்-ஆசை தன்னைக்கொண்டு உயிர்-வாழு..கின்றேன்
 அன்பினில் அணைக்கும் அன்னையைப் போலே 
உள்ளத்தில் அவனைப் பிள்ளையைப் போலே கண்டேன்-நான்
எத்தனை சொந்தம் வந்தால் என்ன  
பொன்பொருள் செல்வம் கொண்டால்-என்ன சாஸ்வதமா 
ஊழை மாய்த்திட  அவன்-துணை போலே 
உண்மை-காட்டிட  சாயியைப்-போலே ஆகிடுமா 
நீங்கள் அத்தனை-உலகிலும் சல்லடைபோட்டுத் தேடுங்கள் 
எங்கள் சாயிபி..ரான்-போல் ஒருவரைக்-கண்டால் கூறுங்கள்
(MUSIC)
கூட்டத்தின் ஊடே-வந்து சிவனாண்டி போலே
நடமாடித் தோன்றும் சாயி  அழகானத்  தாளும் 
என்றைக்கும் மேலிருந்து அருளாசி கூறும் 
அவன்-கைகள் தோன்றாதோ இந்நாட்டில் மீண்டும்
மானிட-வேஷம் பூண்டிடுவானே நாளைய-உலகம் கண்டிடத்தானே வருவானே
அருவாய்-எங்கும் நிறைகிற-பரமம் பாரில்-தோன்றிட உருவாய் நாமும் காண்போமே
நீங்கள் அத்தனை உலகிலும் சல்லடைபோட்டுத் தேடுங்கள் 
எங்கள் சாயிபி..ரான்-போல் ஒருவரைக்-கண்டால் கூறுங்கள்
(2)


No comments:

Post a Comment