Monday, March 21, 2016

48. அமைதியுடன் கண்ணே (மலர்களைப்போல் தங்கை) ***




( மலர்களைப்போல் தங்கை )

அமைதியுடன்..கண்ணே கண்வளர்வாய்
மண்ணில் சேவைசெய்தே..உடல் களைத்துவிட்டாய் 
(MUSIC)
அமைதியுடன்..கண்ணே கண்வளர்வாய்
மண்ணில் சேவைசெய்தே..உடல் களைத்துவிட்டாய்
அற்புதத்தொண்..டுகள் பலபுரிந்தாய் உந்தன்
பொற்பதங் கள்கொண்டே புகல்கொடுத்தாய்
அற்புதத்..தொண்..டுகள் பலபுரிந்தாய்உந்தன்
பொற்பதங்கள்..கொண்டே புகல்கொடுத்தாய்
(MUSIC)
மாமணிமாளிகை வாழ்ந்திடும்-மன்னர்கள்
மண்குடிசைதனில் துயின்றிடும்-ஏழைகள்
(Short Music)
மாமணிமாளிகை வா..ழ்ந்திடும்-மன்னர்கள்
மண்குடிசைதனில் துயின்றிடும்-ஏழைகள்
யாவரும்ஒன்றென மனத்தினில்கொண்..டாய்
அருள்தரும் தெய்வம்நீ பே...தம்-எங்கேகண்டாய்
அற்புதத்தொண்..டுகள் பலபுரிந்தாய் உந்தன்
பொற்பதங்..கள்கொண்டே புகல்கொடுத்தாய்
(MUSIC)
சேயெனஉலகினில் பிறந்துநீ வந்.. தாய்
தாயினைப் போலநீ கரைந்தருள்தந்தாய்
(Short Music)
வாழ்வினில் உயர்ந்திட நல்வழிதந்..தாய்
ஊழ்வினை போய்நெஞ்சில் மா..பெரும் இன்பம்தந்தாய் 
அற்புதத்தொண்..டுகள் பலபுரிந்தாய் உந்தன்
பொற்பதங் கள்கொண்டே புகல்கொடுத்தாய்
(2)
(Music)
பொன்மனம் கொண்டுநீ பா..ரினில்வந்தாய்
கல்மனம்-கரைந்திட அன்பினைத் தந்தாய்
(Short Music)
(2)
முள்படும் பூமியில் கால்படச் சென்றாய்
புண்பட நோய்களை எமக்கென வேநீஏற்றாய்
அமைதியுடன்..கண்ணே கண்வளர்வாய்
மண்ணில் சேவைசெய்தே..உடல் களைத்துவிட்டாய் 
அற்புதத்தொண்..டுகள் பலபுரிந்தாய் உந்தன்
பொற்பதங் கள்கொண்டே புகல்கொடுத்தாய்
(2)
கண்வளர்வாய்.. கண்ணே.. கண்வளர்வாய்
கண்ணே.. கண்வளர்வாய்.. கண்ணே.. கண்வளர்வாய்
கண்ணே.. கண்வளர்வாய் (3)

No comments:

Post a Comment