Monday, March 21, 2016

40. வாராயோ சாயி வாராயோ (வாராய் என்-தோழி வாராயோ)

வாராயோ-சாயி வாராயோ சேய்-எம்மைக் காண-வாராயோ (2)
மண்வந்தநாங்கள் இனிதேவாழ அன்பாலேநீயும் வாராயோ
வாராயோ-சாயி வாராயோ சேய்-எம்மைக் காண-வாராயோ
(Manthram)+Music
இதமானசொல்கொண்-டவனே அன்பில்விடமுண்ட-கண்ட-சிவனே
தயங்காமல்அருளு-பவனே என்றும்விளங்காதபொருளி-றைவனே
உறங்காமல்என்றும் இருப்போனே விரைவாகவந்து காப்போனே
உறங்காமல்என்றும் இருப்போனே விரைவாகவந்து காப்போனே 
வாராயோ-சாயி வாராயோ சேய்-எம்மைக் காண-வாராயோ
(Manthram) + Music
அழுகின்ற-நெஞ்சம்-சிரிக்கும் உன்அன்பாலே அருளும்கிடைக்கும்
தொழுகின்ற உயிர்கள்தனக்கும் நெஞ்சில்நீங்காமல் ஜோதிவிளங்கும்
சிலையாகநின்ற இறைபோலே இல்லாமல்நேரில் வருவோனே
சிலையாகநின்ற இறைபோலே இல்லாமல்நேரில் வருவோனே 
வாராயோ-சாயி வாராயோ சேய்-எம்மைக் காண-வாராயோ
(Manthram) + Music
கடல்போலப் பெருகும்-நீரும் உந்தன் அருளாலே உதிரும்நீறும்
மனம்போல கிடைக்கும்திருவும் உந்தன் அருளாலே பெருகும்சோறும் 
குறையாமல்நின்று துயர்போக்கும் மறையாமல்வந்து உயிர்காக்கும்
குறையாமல்வந்து துயர்போக்கும் மறையாமல்நின்று உயிர்காக்கும்

வாராயோ சாயி வாராயோ சேய்-எம்மைக் காண-வாராயோ
மண்வந்தநாங்கள் இனிதேவாழ அன்பாலேநீயும் வாராயோ
வாராயோ-சாயி வாராயோ சேய்-எம்மைக் காண-வாராயோ
Music & (Manthram)

No comments:

Post a Comment