Monday, June 8, 2015

3. கூறு மனமே கூறு ( ஆறு மனமே ஆறு ) ***


(ஆறுமனமேஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு)

கூறு மனமே கூறு பர்த்தி நாதன்பெயரைக் கூறு (2)
தேறும்வாழ்க்கைப் பாதைதந்த சாயிநாமம்கூறு சாயிநாமம்கூறு
(Short Music) 
கூறு மனமே கூறு பர்த்தி நாதன்பெயரைக் கூறு
(Music)
அன்பில்வந்தான்அன்பேதந்தான் அன்புத்தந்தை சாயீ
கதியிலார்க்கு விரைந்துதந்தான் அடைக்கலத்தை சாயீ
(2)
அன்பிலவன் அன்னையடா -
பெருங்கருணையிலே தந்தையடா
(2)
இந்த மண்ணில்உயிர்கள் மேன்மைகொள்ளத் தன்னைத்தந்த தெய்வமடா
தன்னையேதந்த தெய்வமடா 
கூறு மனமே கூறு பர்த்தி நாதன்பெயரைக் கூறு
கூறு மனமே கூறு பர்த்தி நாதன்பெயரைக் கூறு
(Music)
சேவைசெய்து நோவைப்போக்கு என்றுசொன்ன ஸ்வாமீ
அந்தசேவைக்குமேல் ஏதுமில்லை மனதில்கொள்ளு வாய்நீ
(2)
சேவைசெய்ய வேண்டுமடா -அதுஇறைவன்மகிழும் பூஜையடா
(1+sm+1)
அந்த சேவையிலே மனமிரங்கி  அருளைத்தரும் சாமியடா
 அருளைத்தரும் சாமியடா
கூறு மனமே கூறு பர்த்தி நாதன்பெயரைக் கூறு (2)
(Music)
அன்னைதந்தை நண்பனான சத்தியமே சாயீ(SM)
ப்ர சாந்தியிலே ஒளிர்ந்துநின்ற நித்திலமே சாயீ
(SM)
தூயநெஞ்சு தந்திடுநீ ஓய்ந் திடாமல் காத்திடுநீ + (SM)
மீண்டும்வந்து அவதரிப்பாய் எங்கள்ப்ரேம சாயி எங்கள்ப்ரேம சாயி
கூறு மனமே கூறு பர்த்தி நாதன்பெயரைக் கூறு
தேறும்வாழ்க்கைப் பாதைதந்த சாயிநாமம் கூறு சாயிநாமம் கூறு
கூறுமனமே கூறு பர்த்தி நாதன்பெயரைக் கூறு

English Translation

Oh.. Mind.. Chant the name of the Lord of Parthi
Chant the name of the SAI who gave the right path for living

He came with love, came in love, the loving father SAI
He gave refuge to the destitudes at once
He is the love personified mother and the father who showers his boundless grace
He is the God who sacrificed Himself for the living beings of the world

“Alliviate the Pain through Service” – Thus spake Swamy
Oh.. mankind, Keep in mind that there is nothing greater than Service
Service is the Pooja that will delight God.
Having been gladdened by your service, He will give His grace.

Oh.. SAI ; You are our Mother, Father and Friend
You are the perl that twinkles ever in Prasanthi
Purify our heart;Don’t rest until we are saved
(for that), Please incarnate again , our dear Prema Sai

Oh.. Mind.. Chant the name of the Lord of Parthi
Chant the name of the SAI who gave the right path for living

No comments:

Post a Comment