Wednesday, March 23, 2022

590.பூவென ஸ்வாமி(பூ மழை தூவி )

பூவென ஸ்வாமி நடந்தங்கு காட்சி தந்தது தெரிகின்றது
திரு நீறினை சாயி அன்புடன் கைகளில் தந்தது தெரிகின்றது 
நெஞ்சினில் நினைவென எழுகின்றது
(music)

(MUSIC)

அழகான தாளங்கள் மேவிடப் பாடல்கள் நாள்தோறும் எழும் நாதமாய்
(SM)

நமைக் கண்ணோடு கண்-பூட்டி நம்-சாயி தரும் நோக்கில் விடும் பாவம் வெகு வேகமாய் 
ஸ்வாமி பார் என்னைப் பார் என்று மனம் சொல்ல
அந்த நேரத்தில் அவர் காண மனம் துள்ள
பூவென ஸ்வாமி நடந்தங்கு காட்சி தந்தது தெரிகின்றது
திரு நீறினை சாயி அன்புடன் கைகளில் தந்தது தெரிகின்றது 
நெஞ்சினில் நினைவென எழுகின்றது
பூவென ஸ்வாமி நடந்தங்கு காட்சி தந்தது தெரிகின்றது
(MUSIC)

கரும்-க்ரீட ஜடையோடு நம் ஸ்வாமி நடை போட பார் கண்ட எழில் கூறவா

யார் கண்டாலும் ஒரு நாளும் 
யார் கண்டாலும் ஒரு நாளும் பேராவல் தீராது என்றாகும் எழில் அல்லவா 
நீறளிக்கின்ற கரம் ஆடும் எழில் காண நம் இரு கண்கள் போதாது போதாதே
(MUSIC)
தாள் பட்ட இடம் தொட்டு கண் சூடிக் கொண்டாலும் நம் வாழ்வு கடைத்தேறிடும் 
(sm)

அவர் கை கொண்டு தரும் நீறில் நம் பாவம் கணப்போதில் கரைந்தோடித் தான் சென்றிடும் 
தினம் நம் ஸ்வாமி தரும் காட்சி நாம் காண 
அதைப் பார்க்கின்ற நம் உள்ள நோய் போக
பூவென ஸ்வாமி நடந்தங்கு காட்சி தந்தது தெரிகின்றது
திரு நீறினை சாயி அன்புடன் கைகளில் தந்தது தெரிகின்றது  
நெஞ்சினில் நினைவலை எழுகின்றது

No comments:

Post a Comment