Tuesday, September 28, 2021

566. உன்னை நினைத்தே (எண்ணப் பறவை சிறகடித்து) **

உன்னை நினைத்தே வாழ்வதற்கே என்னைப் பழக்கிடய்யா
நான் எனை நினைந்தே வாழ்வதிலேயே நாளும் கழியுதய்யா
(SM)

(MUSIC)
நாளோர் துன்பம் இன்பம் என்றே நெஞ்சும் அலைகின்றதால்
(2)
உன்னை நான் நினைத்தாலும் அது-கண நேரம் என்றே இருக்கின்றாம்

என்று உன்பிள்ளை என் நிலை சொன்னேன் உனக்கது கேட்கல்லையா
தந்தை உருவில் வந்து நடந்தும் உனக்கெனைத் தெரியல்லையா
உன்னை நினைத்தே வாழ்வதற்கே என்னைப் பழக்கிடய்யா
நான் எனை நினைந்தே வாழ்வதிலேயே நாளும் கழியுதய்யா
(MUSIC)
உன் பதம் மேலே ஓர் வரம் வேண்டேன்
எனக்கதை அளித்திடய்யா
(2)
உன்னை நினைப்பதனாலே மறக்குது பாரே என்றே ஆக்கிடய்யா
உன்னை நினைப்பதனாலே பறந்திடுமாறே என்னை ஆக்கிடய்யா
(SM)
அன்னையும் சாயி தந்தையும் சாயி என்று உன் புகழில்லையா நீ
அதற்குத்தக செயல் கொள்ளும் கடமை உனக்கில்லையா
உன்னை நினைத்தே வாழ்வதற்கே என்னைப் பழக்கிடய்யா
நான் எனை நினைந்தே வாழ்வதிலேயே நாளும் கழியுதய்யா

சாயி கீதம்-6

முதல்பக்கம் 

No comments:

Post a Comment