Friday, May 29, 2020

315. அங்கே சாயிபிரான் ( அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்)***




அங்கே சாயிபிரான் தூங்குகிறார் உலகத்தை மறந்து 
இங்கே பந்த மாயம் சிரிக்குதம்மா உலகத்தைக் குலைத்து   
அந்த-சாயி மீண்டும்-பூமி வந்திடும்-சேதி
கேட்க உருகுகிறார் பக்தரெல்லாம் தினம்மெழுகாகி
இங்கே பந்த மாயம் சிரிக்குதம்மா உலகத்தை குலைத்து 
உரக்கவே சிரித்து  
(MUSIC)
வயிறு நிறைய ஊட்டிடுவார் தாயுமாகி  
வரும் துன்பங்களைத் துடைத்திடுவார் எங்கள் சாயி
எனதினமும் பூமியில் ஏங்கிப்பாடும் பாட்டிலே
இறங்கி-என்று ஸ்வாமி-வந்து  நடந்திடுவார் நாட்டிலே நடந்திடுவார் நாட்டிலே
அங்கே சாயிபிரான் தூங்குகிறார் உலகத்தை மறந்து 
இங்கே பந்த மாயம் சிரிக்குதம்மா உலகத்தை குலைத்து 
(MUSIC)
பாதசேவை தந்திடுவாள் எங்கள்-சாயிமா
அதைப் பெறுவதற்குக் காத்திருக்கோம் ரொம்ப காலமா
உலகில்-வாடும் பிள்ளைகள் தாயைப்பாடி அழைக்கிறோம் 
ப்ரேமசாயி திரும்பும்நாளைப் பார்த்து-சோர்ந்து களைக்கிறோம்
 பாடிப்பாடி அழைக்கிறோம்
இங்கே பந்த மாயம் சிரிக்குதம்மா உலகத்தை குலைத்து 
உரக்கவே சிரித்து  
(MUSIC)
மனதைவாட்டும் பிரிவுத்துன்பம் உயிரைத்தின்பதோ  
அதைப்பார்த்திடாமல் அந்தசாயி உறக்கம்கொள்வதோ 
நான்ஒருகை பார்க்கிறேன் சாகும்வரை கேட்கிறேன் 
போனசாயி வரும்நாள்வரை பாட்டுப்பாடிக் கூப்பிடுவேன் 
பாட்டுப்பாடிக் கும்பிடுவேன்




No comments:

Post a Comment