Friday, May 29, 2020

308. சாயி உன் போல (நீயில்லாத உலகத்திலே) **




சாயி உன்போ..ல அன்பளிக்க ஒருத்தரும் இல்லை 
உன் உருவமில்லாமல் கோவிலிலே கருவறை இல்லை 
பூமியிலே யாவருமே உன்அரும் பிள்ளை (2)
உனைக் தொண்டு-கொண்டு தொழுதிடவே போகுது தொல்லை
போகுது தொல்லை
சாயி உன்போ..ல அன்பளிக்க ஒருத்தரும் இல்லை 
உன் உருவமில்லாமல் கோவிலிலே கருவறை இல்லை 
(MUSIC)
உன் முகத்தில் கோபம் எங்கே என்று வந்தது 
உன் வாய்ச்சொல் தேனெனவே செவியில் பாயுது 
உன் இதயம் எமக்கெனவே துடித்திருந்தது (2)
உந்தன் நீறில் எங்கள் நோய்பறந்தே ஓடிப் போகுது
ஓடிப் போகுது 
சாயி உன்போ..ல அன்பளிக்க ஒருத்தரும் இல்லை 
உன் உருவமில்லாமல் கோவிலிலே கருவறை இல்லை 
(MUSIC)
நன்-மனதில் சேவை செய்ய சொல்லித் தந்தாயே 
தன்னைப் புரிந்தே-உய்ய பாதை-தன்னை காட்டி விட்டாயே வேளை நாளை என்றிடாமல் அருள் சொரிந்தாயே (2)
இந்தத் துன்..பம் போ..தும் பூமிக்கு-நீ திரும்பிடு தாயே திரும்பிடு தாயே
சாயி உன்போ..ல அன்பளிக்க ஒருத்தரும் இல்லை 
உன் உருவமில்லாமல் கோவிலிலே கருவறை இல்லை 


No comments:

Post a Comment