Sunday, May 10, 2020

229. ஹேசாயி தாயே என்தாயே( தூங்காதே தம்பி தூங்காதே )**



ஹே சாயி தாயே என்-தாயே (2)

அன்புவழி மண்ணில்வந்து தந்தாயே 
ஹே சாயி தாயே என்தாயே
SM
உன் காவியின்உடையும் புன்சிரிப்பும்
பலர் தரித்திரம்-போக்கிய உதவிகளும்
சக்தித் திறத்தால் நீ செய்த செயலும் (2)
சரித்திரத்தால் எழுத இயன்றிடுமோ
ஹே சாயி தாயே என்தாயே அன்புவழி மண்ணில்வந்து தந்தாயே 
ஹே சாயி தாயே என்தாயே
(MUSIC)
தங்கள்-துயருக்கெல்லாம் உன்னையடைந்து-பின்னர்
நன்மை-அடைந்தவுடன் உனை-மறந்தார்
 சிலர் அல்லும்-பகலும்தேனாய்ப் பாலாகக் கல்லில்விட்டு
அதுதான் பூஜைஎன்று அலட்டிக் கொண்டார்
அல்லும்-பகலும்தேனாய்ப் பாலாகக் கல்லில்விட்டு
அதுதான் பூஜைஎன்று அலட்டிக் கொண்டார்
உறங்கி வந்தோர்க்கெல்லாம் விழிப்பு ததந்தாய் ...ஆ..ஆ..ஆ..
உறங்கி வந்தோர்க்கெல்லாம் விழிப்பு தந்தாய்
உன்போல் தானேசேவைசெய்து யார்-சிறந்தார் 
ஹே சாயி தாயே என்தாயே அன்புவழி மண்ணில்வந்து தந்தாயே 
ஹே சாயி தாயே என்தாயே
(MUSIC)
ஓர் கடைவிழிப் பார்வைக்குனை சுற்றியே-வந்தோம் (2)
உயர் அருள்தரும் பாதங்களைப் பற்றிஇருந்தோம்
வினைகளைப் போக்கிடவா எங்களின் தந்தாய்
உந்தன் கடமையும் முடியலையே இன்னமும் தான்
இன்னும் பொறுப்புகள் புவிதனில் இருப்பதனால்
உந்தன் பொன்னானத் திருவுளத்தால் திரும்பிடப்பா
ஹே சாயி தாயே என்தாயே அன்புவழி மண்ணில்வந்து தந்தாயே 
ஹே சாயி தாயே என்தாயே 







No comments:

Post a Comment