Saturday, May 9, 2020

212. அந்த த்ரேதா யுகம்வந்த ( நீங்க நல்லா இருக்கோணும்) **



விருத்தம் 
பாரதமாம் இந்தத்திருநாட்டில் அன்புருவாய்
மானிடத்துப் பொன்னுடலில் கனிவுடனே உருவாகி
மனத்தாலொரு பேதம் யாரிடமும்  இலனாகி
மண்ணில்தர்மம் மறையாமல் இருக்க 
ஷிரிடிசாயி-சத்யசாயி எனும்பேரில் இருந்த பெருமானே

மண்ணை நாடியொரு அன்னைஎன தாலாட்ட
பண்ணில்பாடி உனைநினைந்து வாடுகின்ற பிள்ளைகளைச் சற்று
அகண்ட கருணையினால் கண்திறந்து
(Very Short Music)
கண்டுலகம்வந்திடுவாய் வாடும்பொழுதெல்லாம் வாரி எடுத்தணைத்து
தந்தையென நாட்டில் துயர்போக்கிக் காத்திடுவாய்
உன் இதயம் இறங்கிடுவாய்

கொல்லும் வினையெல்லாம் அருள்சொரிந்து நீபோக்கி
கண்ணில் தெரிவதாய் உருவமாய் மண்ணோர்க்கு
ப்ரேமைதர-வாராய் வந்திடுவாய்-நீ-இன்றே
தந்தையேஎங்கள்தாயே உலகத்தில்நீ
இந்த உலகத்தில்நீ உலகத்தில்நீ
(Very Short Music)
அந்த த்ரேதா  யுகம்வந்த ராமனும் சாயி
பின்னர் த்வாபரத்தில் கீதைதந்த கண்ணனும் நீயே
(2)
இந்த கலியுகத்தில் ஷிரிடியிலே வந்துபின்னாலே
சத்ய சாயிராம னவதாரம் கொண்டதும் நீயே
(2)
 அந்த த்ரேதா  யுகம்வந்த ராமனும் சாயி
பின்னர் த்வாபரத்தில் கீதைதந்த கண்ணனும் நீயே
(MUSIC)
உனக்கு லோகத்திலே ஈடு ஏதம்மா
உலகில் அன்புதந்த அன்னைசாயிமா
(2)
கேடுகள்ளம் இல்லாத உன்பாதம் காட்ட
மண்ணில்வழி உண்டுஎண்ணிப் பாரம்மா
 அம்மா அன்பின்மொழி கொண்டுமண்ணைச் சேரம்மா (2)
அன்று ராமனாகக் கண்ணனாக வந்தவன் நீயே
இந்த கலியுகத்தின் அன்புதந்தை  சத்திய சாயி
(MUSIC)
பாடுபட்டு சோர்ந்தபொழுதில் அன்புகொடுத்த தந்தாய்
பாழும்ஊழைக் களைந்து-உலகைக் காவல்செய்ய வந்தாய்
நீ பாடுபட்டு சோர்ந்தபொழுதில் அன்புகொடுத்த தந்தாய்
பாழும்ஊழைக் களைந்து-உலகைக் காவல்செய்ய வந்தாய்

உன்சேவையாலே வந்தஇன்பம் சொல்லவார்த்தை இல்லை
சுயநலமே சாயிநெஞ்சில் கடுகளவும் இல்லை
(2)
கடுகளவும் இல்லை
அந்த த்ரேதா  யுகம்வந்த ராமனும் சாயி
பின்னர் த்வாபரத்தில் கீதைதந்த கண்ணனும் நீயே
(MUSIC)
 தாயும்நீயே தந்தையும்நீயே எங்களின்சாயி
பாரில் ப்ரேமசாயி வடிவில்மீண்டும் பிறந்திடுசாயி
(2)
பெருக்கெடுக்க வேண்டுமுந்தன் அன்புவெள்ளமே
பெருக்கெடுக்க வேண்டுமுந்தன் அன்புவெள்ளமே உலகில்
பிரேமசாயி மீண்டும்வந்தால் மனதுநிறையுமே
மனதுநிறையுமே
அந்த த்ரேதா  யுகம்வந்த ராமனும் சாயி
பின்னர் த்வாபரத்தில் கீதைதந்த கண்ணனும் நீயே
(MUSIC)
விதியைவெல்ல நாளும்உந்தன் தரிசனம்-தாராய்
மழையைப்போலே பொழிந்தஉந்தன் கருணையைத்-தாராய்
உலகம்உந்தன் வரவுக்காக அழுதிடக்காண்பாய் 
அன்புராஜ்யம் உலகில்என்றும் நிலைத்திட  வாராய் 
நிலைத்திட  வாராய்

 அந்த த்ரேதா  யுகம்வந்த ராமனும் சாயி
பின்னர் த்வாபரத்தில் கீதைதந்த கண்ணனும் நீயே 
(2)



No comments:

Post a Comment