Wednesday, May 6, 2020

127. நெஞ்சில் சாயி ராமன் (கண்ணன் என்னும் மன்னன் பேரை)***

நெஞ்சில் சாயி ராமன் பேரைக் கொள்ளக் கொள்ள
அஞ்சும் பாவம் செல்லும் தானே மெள்ள மெள்ள
(2)    
ப்ரணவம் என்னும் ஓமின்ஓசை மெல்ல மெல்ல      
உன்னில் கேட்கும் ஒளியும்பெருகும் காலம் செல்ல
(2) 
நெஞ்சில் சாயி ராமன் பேரைக் கொள்ளக் கொள்ள
அஞ்சும் பாவம் செல்லும் தானே மெள்ள மெள்ள
(MUSIC)
என்றும்சாயி ராமன்சொன்ன தென்னஎன்ன(2)
நெஞ்சம்தங்க அள்ளித் தந்த தென்னஎன்ன (2)
மண்ணில்  உயிர்கள் ஏக்கம் தீர்க்கும் அன்பைத்  தானே
பின்னும்தொடர்ந்தே உயிரைக்காக்கும் பண்பைத் தானே
நெஞ்சில் சாயி ராமன் பேரைக் கொள்ளக் கொள்ள
அஞ்சும் பாவம் செல்லும் தானே மெள்ள மெள்ள
ஆ..ஆ....ல.ல..ல..லாலலா.. ..ஆ..ஆ.... 
(Short Music)
பொங்கும்துக்கம் அவனைக்கண்டால் விலகும் விலகும்(2)
அவனேஅன்பை நேரில்வழங்கும் தெய்வம் ஆகும்(2)
(Very Short Music)
ஆசை துஞ்சும் நெஞ்சம் அவனால் தெளியும் தெளியும்
என்றும் நிற்கும் விதமாய் எழும்பும் ஒளிரும்  ஒளியும் 
நெஞ்சில் சாயி ராமன் பேரைக் கொள்ளக் கொள்ள
அஞ்சும் பாவம் செல்லும் தானே மெள்ள மெள்ள
ப்ரணவம் என்னும் ஓமின்ஓசை மெல்ல மெல்ல
உன்னில் கேட்கும் ஒளியும்பெருகும் காலம் செல்ல
நெஞ்சில் சாயி ராமன் பேரைக் கொள்ளக் கொள்ள
அஞ்சும் பாவம் செல்லும் தானே மெள்ள மெள்ள

No comments:

Post a Comment