Sunday, May 28, 2017

526. சாயி நமக்குத் தோழன்(காலம் நமக்குத் தோழன்)



சாயி-நமக்குத் தோழன் சேர்த்து-அணைக்கும் நண்பன் (2)
பொன்-கேட்கவில்லை குலம்- பார்ப்பதில்லை சாயிராம் நம்மிடமே
(Short Music)
பொன்-போலத் தானே சாயி-மனம் பூஞ்சோலை-தானே அவனின்-முகம்
(2)
ஆறாதத்-துயரும் காற்றாய்ப்-பறக்கும் அன்பே-நீ எனும்-சாயி குரலிலடா…குரலிலடா .. குரலிலடா
சாயி-நமக்குத் தோழன் சேர்த்து-அணைக்கும் நண்பன்
(MUSIC)
உண்பதுவும்-உறங்குவதும் வாழ்வென்று இருந்த-என்னின் உள்ளே புகுந்தானடா
உள்ளாடும் தெய்வப்-பொறி தானென்று குணக்குன்று நன்றே உரைத்தானடா
பெற்றவளைப் போல்-சாயி  பிள்ளைகளை-பங்காரு
எனக்கூறி அழைத்தானடா
தந்தையினும் அன்பளிக்க பரமசிவன் அவன்-நினைக்க பார்-தோன்றி வந்தானடா
சாயி-நமக்குத் தோழன் சேர்த்து-அணைக்கும் நண்பன்
சாயி-நமக்குத் தோழன் சேர்த்து-அணைக்கும் நண்பன்
(MUSIC)
கற்பகமாய் நின்றபடி கையுதிரும் நீறளித்து நம்-வினையைக் கொய்தானடா
அனுதினமும் தரிசனத்தில் பெரும்-ஜனத்தின் குறைதீர்த்த அருளருவி அவன்-தானடா
நல்லோர்க்கு வரும்-நோயைத் தான்-கொண்டு பலபாடம் (2)
நாம்-காணத் தந்தானடா
தொழுவதாக அவன்-படத்தில்  விழுவதாக-நீறிருக்க  கவலைகள் நமக்கேதடா



No comments:

Post a Comment