உலகென்னும் மேடை செய்தானே அதில் தன் உடலுடன் வந்தானே
கடல் என்று பாசம் கொண்டானே அவன் தன் சேய்களைக் காத்தானே
(2)
சாயி பெருமான் சாயி பெருமான்.. சாயி பெருமான்.. சாயி பெருமான்
(MUSIC)
அளவிலா அன்பைத்தானே
வாரிக் கொடுத்தானே
அலகிலாத்
திருவிளையாட்டை ஆடிக் களித்தானே
(2)
நம்மை அன்பென்று
கூறிடும் அவன் சொல்லொன்று போதுமே
அவன் கைகள்
பெய்கின்ற நீரிலே நம் ஜென்மங்கள் தீருமே
உலகென்னும் மேடை செய்தானே அதில் தன் உடலுடன் வந்தானே
கடல் என்று பாசம் கொண்டானோ அவன் தன் சேய்களைக் காத்தானே
(2)
சாயி பெருமான் சாயி பெருமான்.. சாயி பெருமான்..
சாயி பெருமான்
(MUSIC)
உருவத்தைக்
கண்டே மனிதன் என்று நினைக்காதே
சிறுமதி
கொண்டே அவனின் நீதி மறக்காதே
(2)
அன்பே
என்றாகிப் பாரிலே இறை வந்தானே நேரிலே (2)
அவன்
கங்கை கொண்டாடும் ஈசனே அவன் மெய்யன்றி வேறிலே (2)
உலகென்னும் மேடை செய்தானே அதில் தன் உடலுடன் வந்தானே
கடல் என்று பாசம் கொண்டானோ அவன் தன் சேய்களைக் காத்தானே
(MUSIC)
சத்தியம்
என்றே-அவனை நாம்-உ..ணரவேண்டும் உ..ணரவேண்டும்
நித்தியம்
அவன் திருநாமம் நாம் உரைக்க வேண்டும் உரைக்க வேண்டும்
அன்பினில்
மானவ சேவை நாம்-பு..ரியவேண்டும் புரியவேண்டும்
ஞானியர்
அதைத்தான் செய்தார் நாம்-பின் பற்றவேண்டும்
நெஞ்சே செல்லாதே
பாரிலே அது பொய்யின்றி வேறிலே
உயர்
மெய்யே கொண்டோடிப் பாரிலே அவன் வந்தானே நேரிலே
உலகென்னும் மேடை செய்தானே அதில் தன் உடலுடன் வந்தானே
கடல் என்று பாசம் கொண்டானே அவன் தன் சேய்களைக் காத்தானே
(MUSIC)
பக்தியில்
அவனை நினைத்தே நாமும் அழ வேண்டும் அழ வேண்டும்
முக்தியை
வேண்டி அவனின் பாதம் தொழ வேண்டும் தொழ வேண்டும்
உலகென்னும் மேடை செய்தானே அதில் தன் உடலுடன் வந்தானே
கடல் என்று பாசம் கொண்டானே அவன் தன் சேய்களைக் காத்தானே
ஓம் சாயி ராம ராம்-ராம்-ராம் ஹரே ஹரே ராம ராம்-ராம்-ராம்
ஸ்ரீ சாயி ராம ராம்-ராம்-ராம் ஹரே ஹரே ராம ராம்-ராம்-ராம்
No comments:
Post a Comment