Tuesday, January 14, 2025

667.விழிகள் பரிவாக நோக்கும்(கவிதை அரங்கேறும் நேரம் )** RECORDED

 விழிகள் பரிவாக நோக்கும் அதில் ப்ரேமை பரிமாற்றம் ஆகும்
உடன் மனதின் ஆர்ப்பாட்டம் ஓயும் அதில் இதயம் பெரும் மாற்றம் காணும்
 சாயி உனைக்காணும் நேரம்
(MUSIC)
 விழிகள் பரிவாக நோக்கும் அதில் ப்ரேமை பரிமாற்றம் ஆகும்
உடன் மனதின் ஆர்ப்பாட்டம் ஓயும் அதில் இதயம் பெரும் மாற்றம் காணும்
 விழிகள் பரிவாக நோக்கும் அதில் ப்ரேமை பரிமாற்றம் ஆகும்
(SM)
சாயி உன் பாசம் தேடி வரும் மாந்தர் எந்நாளும் கோடி
ஸ்வாமி உன் பாசம் தேடி வரும் மாந்தர் எந்நாளும் கோடி
நீ தருவாய் எல்லார்க்கும் ஆசி ஒரு தாய் போல் சொந்தம் கொண்டாடி
நீ  அன்பு புரண்டோடும் ஆறு  உனைக் காணும் கண்ணாகும்  ஆறு 
 விழிகள் பரிவாக நோக்கும் அதில் ப்ரேமை பரிமாற்றம் ஆகும்
(MUSIC)
கைகள் கொண்டே நீ சுரந்து தரும் நீறே நோய் போக்கும் மருந்து
அதைக் கொண்டோர் வேறேதும் எதற்கு எனச் சொல்வார் உன் பாதம் பணிந்து 
மனம் எங்கும் தாளாத உவகை சொல் எங்கே சொல்  கூறும்  அதனை
  விழிகள் பரிவாக நோக்கும் அதில் ப்ரேமை பரிமாற்றம் ஆகும்
(MUSIC)
பேரில் அன்பாடும் சாயி நீ உலகோர் எல்லார்க்கும் ஸ்வாமி 
விழியாலே அன்பூட்டும் தாயே உனைப் போலே வேறொன்றும் நீயே
என் பிறவி  தொடர்கின்றதானால்  உன் நினைவை மறவாமை வேண்டும்
விழிகள் பரிவாக நோக்கும் அதில் ப்ரேமை பரிமாற்றம் ஆகும்
உடன் மனதின் ஆர்ப்பாட்டம் ஓயும் அதில் இதயம் பெரும் மாற்றம் காணும்

விழிகள் பரிவாக நோக்கும் அதில் ப்ரேமை பரிமாற்றம் ஆகும்
 



 






Thursday, October 10, 2024

666.குழல் இனிது என்போரே(நிலவு ஒரு பெண்ணாகி) **

 

குழல் இனிது என்போரே சாயி குரல் போலோ 
யாழினிது என்போரே அவர் குரலின் மேலோ 
(MUSIC)

குழல் இனிது என்போரே சாயி குரல் போலோ 
யாழினிது என்போரே அவர் குரலின் மேலோ சாயி குரல் போலோ 
இசை பிறக்கும் ஓம் போலே சாயி குரல் தானோ (2)
பங்காரு என்பாரே அது கிடைக்கும் பேறோ
குழல் இனிது என்போரே சாயி குரல் போலோ 
யாழினிது என்போரே அவர் குரலின் மேலோ சாயி குரல் போலோ  
(MUSIC)

உள்ளம் தனில் சேயாக இறைவன் வரத் தாயாக (2)
அன்பமுதம் தரலாக` என்ன தவம் செய்தோமோ 
புன்னகை மேல் எதற்கோ சொல் அதை விளக்க ஏதோ சொல் (2)
அதைவிடவே மானிடர்க்கு பிறப்பெடுத்த பயன் என் கொல் ..!
குழல் இனிது என்போரே சாயி குரல் போலோ 
யாழினிது என்போரே அவர் குரலின் மேலோ 
(MUSIC)

கவருகிற அவர் குரலே  ஒரு கணத்தில் மயக்கிடுமே
கேட்கையிலே அமிழ்தினைப் போல் இனிக்கும் அது இறை-வரமே 
வாழ்க்கையினில் பேறாக பக்தருக்கு கிடைத்ததுவே (2)
ஆண்டவனின் வடிவான சாயிபிரான் திருக்குரலே  
குழல் இனிது என்போரே சாயி குரல் போலோ 
யாழினிது என்போரே அவர் குரலின் மேலோ 
(MUSIC)

ஈன்று புறம் தருதலுடன் தாய் கடமை நின்றிடுமோ 
என்றுரைத்து  நம்முடனே இருக்க புலம் வந்ததுவே 
அலைமேலே துயில்பவனே மலைமேலே உறைசிவனே (2) 
நமக்கெனவே வடிவெடுத்து நம்முடனே இருந்ததுவே 
குழல் இனிது என்போரே சாயி குரல் போலோ 
யாழினிது என்போரே அவர் குரலின் மேலோ சாயி குரல் போலோ



சாயி கீதம்-7

முதல்பக்கம்



Thursday, October 3, 2024

665.உலவுகிற விண் மீனோ (நிலவு ஒரு பெண்ணாகி) **

உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட முடிவு செய்த நிலவோ  
(MUSIC)
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ இறங்கி வந்த  நிலவோ 
வாயுதிரும் பூப்போலே இருக்கும்-உந்தன் சிரிப்போ (2)
தேனெனவும் அமுதெனவும் இனிப்பதுந்தன் மொழியோ 
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ இறங்கி வந்த நிலவோ
(MUSIC)
உள்ளம் தனில் சேயாக பாசம் தரும் தாயாக (2)
கதறுகிற பக்தர் மனம் தேற்ற புலம் வந்தவனோ  
பொன் பொருள்கள் எதற்கோ சொல் நில புலமும் எதற்கோ சொல் (2)
நானிருக்க அவை ஏனோ என்றுரைத்த இறையோ 
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ
(MUSIC)
கவருகிற குரல் குழலோ அதில் ப்ரேமை வழிந்திடுமோ  
பார்க்கையில் நீ மனிதர்கள் போல் தோன்றுவதும் உன் முடிவோ 
வாழ்க்கையினில் பேறாக மானவர்க்கு அமைந்தவனோ (2)
யாக்கையினில் தோன்றாத இறை வடிவாய் மறைந்தவனோ 
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ
(MUSIC)
தேனொழுகும் சொல்லுடனும் உதவிடும் நல் கரத்துடனும் 
இவ்வுலகில் வாழ்ந்திருக்க சாயி உனை வேண்டுகிறேன் 
இறை நாமம் உதட்டினிலே மனித சேவை கரத்தினிலே (2)
படைத்தவனே எனக்கிருக்க உன்னருளை வேண்டுகிறேன் 
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ இறங்கி வந்த நிலவோ


சாயி கீதம்-7

முதல்பக்கம்


 

Thursday, September 26, 2024

662.அன்பே .. என் வடிவு(விழியே கதை எழுது) **


 
அன்பே .. என் வடிவு .. உன் ரூபம்.. அதுதானே
என்றே நீயே   சொன்னாய் சாயி உன் போலவே யார் பாரிலே
(music)
அன்பே யாவும் என்னும் சாயி உன் போலவே யார் பாரிலே
அன்பே என் வடிவு .. உன் ரூபம்.. அதுதானே
அன்பே யாவும் என்..னும் சாயி உன் போலவே யார் பாரிலே
(music)
உனது மொழியமுதத் துளிகள் அது மனதில் கொடுக்குமின்ப அலைகள் (2)
மோனத்தில் என் கண்கள் மூடும் ஆனந்தத்..தில்-உள்ளம் மூழ்கும் 
உன் போலவே யார் பாரிலே
(music)
நாவில் உன் பேரது சொல்ல கண் மூடுது (2)
சேவையால்  செய்வது அந்த பூஜை தான் ஆனது
சேவைக்கு மேலேது பூஜை  முக்திக்கு வேறேதோ பாதை
உன் போலவே யார் பாரிலே
அன்பே என் வடிவு .. உன் ரூபம்.. அதுதானே
அன்பே யாவும் என்..னும் சாயி உன் போலவே யார் பாரிலே
(music)
வேதம் சொல்கின்றது சாயி நீ சொன்னது (2)
காது கேட்கின்றது .. மனது பனிக்கின்றது
எண்ணத்தில் என்றும்-உன் தோற்றம் என் நெஞ்செத்தைப் பண் செய்யத் தூண்டும்
உன் போலவே யார் பாரிலே
(SM)
அன்பே ..என் வடிவு .. உன் ரூபம்.. அதுதானே
அன்பே யாவும் என்..னும் சாயி உன் போலவே யார் பாரிலே
உன் போலவே யார் பாரிலே...




663.யார் என்னென்ன சொன்னாலும்(நீ என்னென்ன சொன்னாலும் ) **

 

யார் என்னென்ன சொன்னாலும் தொடரும்
என்னை சொல் கொண்டு சுட்டாலும் தொடரும்
(2) 
இனி யார் கேலி செய்தாலும் தொடரும்
உன்னை என்றென்றும் என் பாடல் பகரும் 
(2)
சாயீ ..சாயீ 
(MUSIC)

அன்பிற்குரியவன் என எனை நினைந்து (2)
என்னைக் கொஞ்சம் உந்தன் அருகினில் அழைத்து (2)
உந்தன் அருளென மலர்களைச் சொரிந்து (2)
சித்து புரிந்ததை அறிந்திலர் அவர்க்கு
புரிந்ததை உணர்த்து 
யார் என்னென்ன சொன்னாலும் தொடரும்
என்னை சொல் கொண்டு சுட்டாலும் தொடரும்
(MUSIC)

உந்தன் விழுமிய அருளினில் கரைந்து (2)
பொங்கும் மனதினில் பாடல்கள் புனைந்து (2)
கண்கள் குளமென விழிகளும் நிறைந்து (2)
என்னைக் கழுவினேன் நான் அதை முகந்து நான் எனை மறந்து
யார் என்னென்ன சொன்னாலும் தொடரும்
(MUSIC)

வெள்ளி சனியெனும் கிழமைகள் மறந்து 
பர்த்தித் திருமகன் அருளினில் நனைந்து
எந்தன் மனத்தினை உனக்கென அளித்து 
உன்னை முழுவதும் சரண் என அடைந்து 
இருப்பதை நினைந்து  
யார் என்னென்ன சொன்னாலும் தொடரும்
என்னை சொல் கொண்டு சுட்டாலும் தொடரும்
இனி யார் கேலி செய்தாலும் தொடரும்
உன்னை என்றென்றும் என் பாடல் தொடரும்
சாயீ ..சாயீ


சாயி கீதம்-7

முதல்பக்கம்


Tuesday, September 17, 2024

661.அன்புக்குத் தான்(நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது) **

 
அன்புக்குத் தான் அன்பு-கொள்ள ஆசை வந்தது (2)
சாயி உன்னை வந்தடைந்து தஞ்சம் என்றது 
அன்புக்குத் தான் அன்பு-கொள்ள ஆசை வந்தது
மனது-கொள்ளை போகும்-உந்தன் அன்பைக்-கேட்டது (2)
அது அன்பு காட்ட  உன்னைக்-கேட்டுக் கற்றுக்கொண்டது
அது அன்பு காட்ட  உன்னை பார்த்து கற்றுக்கொண்டது
மனது-கொள்ளை போகும்-உந்தன் அன்பைக்-கேட்டது
அது அன்பு காட்ட  உன்னைக்-கேட்டுக் கற்றுக்கொண்டது
கற்றுக்கொண்டது

(MUSIC)

அய்யே பின் அந்த சேவை உன்னைத் தேடி வந்தது 
வள்ளல் உந்தன் ப்ரேமை ஒன்றால் அழகு சேர்த்துக் கொண்டது 
(2)
அன்பாக உந்தன் பேரை நீயும் வைத்துக் கொண்டது (2)
பேறாக எண்ணி 
ந்த அன்பு கர்வம் கொண்டது 
அன்புக்குத் தான் அன்பு-கொள்ள ஆசை வந்தது ஆசை-வந்தது
(MUSIC)

ஆ.
காக்கையின் சிறகிலன்று பா..ரதியார் கண்டது
கண்ணனவன் கருமையினை என்று-கவிதை சொல்லுது
இந்நாளில் அவர்-இருந்தால் உன்னைப் போற்றி சொல்வது 
என் அய்யே நீ  அன்பினது எல்லை-என்று தானது
 
அன்புக்குத் தான் அன்பு-கொள்ள ஆசை வந்தது ஆசை-வந்தது
(MUSIC)

எப்போது வயிற்றுக்கு-நல் உணவு தன்னைக் கொள்வது
என்பதனைத் திருக்குறளும் எடுத்தழகாய்ச் சொல்லுது
பங்காரு என்ற உந்தன் அழைப்பு காதுக்குணவது
 அதை உண்டோர்கள்  வயிற்றுக்காக உண்பதென்பதரியது

அன்புக்குத் தான் அன்பு-கொள்ள ஆசை வந்தது 
சாயி உன்னை சரணடைந்து தஞ்சம் என்றது
அன்புக்குத் தான் அன்பு-கொள்ள ஆசை வந்தது 



Friday, September 13, 2024

664.நீயே அன்பமுது(விழியே கதை எழுது) **


நீயே அன்பமுது உன் பேரே அது தானே ..!
தந்தை நீயே அன்னை நீயே  என் நண்பனும் நீ சாயிராம்
(music)
தந்தை நீயே அன்னை நீயே  என் நண்பனும் நீ சாயிராம்
நீயே அன்பமுது உன் பேரே அது தானே ..!
தந்தை நீயே அன்னை நீயே  என் நண்பனும் நீ சாயிராம்
(music)

எந்தன் மனதின்-எண்ண அலைகள் அதில் முழுதும் உந்தன்-எழில் கலைகள் (2)
என் நெஞ்சில் உன் அன்பு தாகம் தந்தாளுமே உந்தன் தாக்கம்
உன் போலவே வேறாரய்யா
(music)

கண்கள் கணையானது நெஞ்சம் பிணையானது (2)
பஞ்சு மனமானது அது எந்தன் மனையானது
என் நெஞ்சில் வாட்டங்கள் ஏது உன் அன்புக் கண்-பார்க்கும் போது  
உன் போலவே வேறாரய்யா
நீயே அன்பமுது உன் பேரே அது தானே ..!
தந்தை நீயே அன்னை நீயே  என் நண்பனும் நீ சாயிராம்
(music)

ப்ரேமை ஆறானது உலகில் ஆளானது (2)
பேரும் அதுவானது எங்கள் பேறும் அதுவானது 
உன் வார்த்தை தேனூற்றுத் தோயல் 
ஓர் தாயைப் போலன்பின் சாயல்
உன் போலவே வேறாரய்யா
நீயே அன்பமுது உன் பேரே அது தானே ..!
தந்தை நீயே அன்னை நீயே  என் நண்பனும் நீ சாயிராம்
உன் போலவே வேறாரய்யா..