Thursday, May 4, 2017

528. எல்லாமும் அன்பில் உண்டு(பிச்சாண்டி தன்னைக் கண்டு)




எல்லாமும் அன்பில்-உண்டு அன்பு-செய்யுங்கள் 
உங்கள் கனிந்த-இ..த..யத்..தி..னால் தொண்டு-செய்யுங்கள்
(1+SM+1)
நாவினிக்கச் சொல்லியன்புத் தொண்டு-செய்யுங்கள் (2)
என்ற சாயி மொழி வாழ்வினிலே கொண்டு உய்யுங்கள் (2)
எல்லாமும் அன்பில்-உண்டு அன்பு-செய்யுங்கள் 
உங்கள் கனிந்த-இதயத்தினால் தொண்டு-செய்யுங்கள்
(MUSIC)
எத்தனை..யும்-அன்பால் வெல்லணும்-நீங்கள்
எப்போதும் சிரிப்போ..டி..ருக்கணும்-நீங்கள்
(2)
உங்கள்-உள்ளக் கோவில்-தன்னில் தெய்வங்கள்-அன்னை 
தந்தை என்று-சொன்ன ஸ்வாமி-சொல்லை நித்தம்-எண்ணுங்கள்
நெஞ்சில் அன்புத்-தந்தை சாயி-சொல்லை எண்ணி-இருங்கள் 
எல்லாமும் அன்பில்-உண்டு அன்பு-செய்யுங்கள் 
உங்கள் கனிந்த-இதயத்தினால் தொண்டு-செய்யுங்கள்
(MUSIC)
ஆண்டவன் பேரைச்  சொல்லித் தொண்டு புரிவாய்  
கண்ணே-நீ உன்-சுமையை என்னிடம்-வைப்பாய்
சத்தியத்தின் இந்த-சொல்லே ஒன்று-போதும் 
நீ நிம்மதியாய் வாழ்ந்திடப்-பின் என்ன-வேணும் 
நம் சாயிபிரான் சொன்ன-பின்னால் என்ன-வேணும்
எல்லாமும் அன்பில்-உண்டு அன்பு-செய்யுங்கள் 
உங்கள் கனிந்த-இதயத்தினால் தொண்டு-செய்யுங்கள்
(MUSIC)
கைத்தலம் நீறு-தந்தான் இடர்-களைந்தான்
நம்-சாயீசன் பாபா-என்றால் வந்தெதிர் நின்றான்
(2)
நிர்க்குணம் என்ற-பெம்மான் உருவு-கொண்டான்
அவன்-நமக்காக மனித்த-உடல் தரித்து-வந்தான்
அவன்-நமக்காக அன்பின்-பெயர் தரித்து-வந்தான்
எல்லாமும் அன்பில் உண்டு அன்பு-செய்யுங்கள் 
உங்க கனிந்த-இதயத்தினால் தொண்டு-செய்யுங்கள்




No comments:

Post a Comment