Sunday, May 28, 2017

527. நிஜமே உன் நிகர்(நிலவே என்னிடம் நெருங்காதே)**

நிஜமே உன்-நிகர் நீ-தானே பார் முழுதும் உனைப்போல் வேறில்லை (2)
உணவாய் அன்பினைத் தருவோனே-நீ என்-தாய் என்றால் மிகையில்லை
நிஜமே உன்-நிகர் நீ-தானே பார் முழுதும் உனைப்போல் வேறில்லை
(MUSIC)
மேடையில் அழகாய்ப் பலர்-வரலாம் 
அவர்-கோலத்தை எழிலாய்ப் புனைந்திடலாம்
(2)
ஆயினும்-நா..ய..கன் இல்லையென்றால் 
அந்நாடகம் சுவைத்தே இருந்திடுமோ
நிஜமே உன்-நிகர் நீ-தானே பார் முழுதும் உனைப்போல் வேறில்லை
(MUSIC)
கோது-இல்லாத ஓர்-தலைவா 
நல்ல உள்ளத்தில் உறையும் வாலிறைவா 
(2)
ஆடிய-பாதம் பணியுமுன்னே நீ-ஓடிவிட்டாய்-ஏன் சொல்லிடையா
நிஜமே உன்-நிகர் நீ-தானே பார் முழுதும் உனைப்போல் வேறில்லை
(MUSIC)
அமைதி பொல்லாத போதையன்றோ 
அந்த போதையை நீ-தான் ஊட்டிவிட்டாய் 
(2)
அந்நிலை-அந்தோ நானிழந்தேன் 
எந்தன் நினைவில் நின்றேன்-நீ ஓடிவிட்டாய்
நிஜமே உன்-நிகர் நீ-தானே பார் முழுதும் உனைப்போல் வேறில்லை 
உணவாய் அன்பினைத் தருவோனே-நீ  என்-தாய் என்றால் மிகையில்லை
நிஜமே உன்-நிகர் நீ-தானே பார் முழுதும் உனைப்போல் வேறில்லை

No comments:

Post a Comment