ஒரு மானிடனாய்-இந்த பூவுலகில் அந்த இறைவன்-வந்தான் அவன் பெயர்-சாயிராம்
(2)
அன்று ராமனுமாய்ப் பின்பு-கண்ணனுமாய் அவன்-அவதரித்தான்
மீண்டும்-அவதரிப்பான்
ஒரு மானிடனாய்-இந்த பூவுலகில் அந்த இறைவன்-வந்தான் அவன் பெயர்-சாயிராம்
(MUSIC)
தர்மம்-தோற்காது சென்று-மறையாது மடிந்து-எந்நாளுமே
காலைப் பனி-போல அதர்மம் அதை-மூட முயலும் சில-காலமே
நல்லறம் ஒங்கவே வந்து-நான் தோன்றுவேன்
கண்ணன் சொன்ன-சொல்லை இன்றும்-நீயே காணலாம்
ஒரு மானிடனாய்-இந்த பூவுலகில் அந்த இறைவன்-வந்தான் அவன் பெயர்-சாயிராம்
(MUSIC)
உடலை-நிஜமென்று உனது-அறியாமை என்றும்-கொள்கின்றதே
உண்மை-அதுவல்ல உனது-சுயரூபம் கூட இறை-என்பதை
அன்று-நம் சாயிராம் சொன்னதே உண்மையாம்
நாளை மீண்டும்-பாரில் வந்து-இதையே கூறுவான்
ஒரு மானிடனாய்-இந்த பூவுலகில் அந்த இறைவன்-வந்தான்
அவன் பெயர்-சாயிராம்
(MUSIC)
உண்மை எனும்பேரைக் கொண்டு-இப்பாரில் வந்த இறை-சாயிராம்
மீண்டும்-இப்பாரில் ப்ரேமை-உருக்கொண்டு திரும்பு..வான்-சாயிராம்
(2)
சாயிராம் வாழ்க்கையே சொல்லிடும் செய்தியே
நன்றாய் புரிந்து-கொண்டால் கிட்டும்-தானாய் முக்தியே (2)
ஒரு மானிடனாய்-இந்த பூவுலகில் அந்த இறைவன்-வந்தான்
அவன் பெயர்-சாயிராம்
அன்று ராமனுமாய்ப் பின்பு கண்ணனுமாய் அவன்-அவதரித்தான்
மீண்டும்-அவதரிப்பான்
ஒரு மானிடனாய்-இந்த பூவுலகில் அந்த இறைவன்-வந்தான் அவனின் பெயர்-சாயிராம்
No comments:
Post a Comment