விருத்தம்
ப்ரேமையுடன் சாயீசனே அவதரித்தோர் தாயெனவே
நீ-உலக மேடையிலே அன்ன-நடை பயில்வாயே
அன்ன நடை பயில்வாயே
______________________________________________________________________________
உலகுக்கு-மீண்டும் வருவாயா-நீ திரும்பிட ஏங்கிடும் மனம்-கண்டு
(1+SM+1)
பயிருக்கு நீர்போல் சொரிவாயா-என ஏங்கிடும் என்போல் பலருண்டு
உலகுக்கு-மீண்டும் வருவாயா-நீ திரும்பிட ஏங்கிடும் மனம்-கண்டு
(MUSIC)
புகலுக்குமே-ஓர் புகல்போலே என்-சாயிராமன்-உன் தாள்கள் உண்டு
(2)
என்றிடும்-பிள்ளை எனைப்போலே-இந்த பூமியில்-ஆயிரம் பேர்-உண்டு
இளகிடும் தாய்-நீ என்றானால் இங்கு-வாடிடும் சேய்கள் துயர்-கண்டு
உலகுக்கு-மீண்டும் வருவாயா-நீ திரும்பிட ஏங்கிடும் மனம்-கண்டு
(MUSIC)
உன்-விளையாட்டே இதுவானால் இன்றே நிறுத்திடுவாயே கருணை கொண்டு
(2)
என்திருப்பாட்டே உனதானால்-நீ நேர்-வந்து கேட்டே அருள்-இன்று
உலகுக்கு-மீண்டும் வருவாயா-நீ திரும்பிட ஏங்கிடும் மனம்-கண்டு
(MUSIC)
விண்ணுக்கு மேலே பறந்தாலும் உனை நெஞ்சில் பார்த்திடும் திறம்-ஒன்று
கற்றிட முயல்வேன் நான்-நன்று-அந்த நிலைவரும் நாள்வரை நிஜமென்று
(SM)
(BOTH)
உலகுக்கு-மீண்டும் வருவாயா-நீ திரும்பிட ஏங்கிடும் மனம்-கண்டு
பயிருக்கு நீர்போல் சொரிவாயா-என ஏங்கிடும் என்போல் பலருண்டு
உலகுக்கு-மீண்டும் வருவாயா-நீ திரும்பிட ஏங்கிடும் மனம்-கண்டு
No comments:
Post a Comment