Sunday, May 7, 2017

428. ஐயா-உன் கண்ணெடுத்து (தெய்வத்தின் தேரெடுத்து)**


விருத்தம்
என்-மனத்தி..லேபுகுந்து சாயி-என்னை ஆட்கொண்டாய் 
சொந்..தங்களும்-பொன்பொருளும் தந்திடுமோ உன்-அன்பை
______________________

ஐயா-உன் கண்ணெடுத்து என்னை-நீ பாரு 
சாயி-நீ இல்லையென்றால் வெறெனக்காரு
(2)
(MUSIC)
 பூமிக்கு ஸ்வாமீ ஆருந்தன் ஈடு 
நீ இல்லையென்றால் நானிலம் ஏது
(2)
பாபங்களாய்ப்-புரிந்தேன் நானும்-விடாது (2)
எதையும் பொறுக்கும் அய்யா நீ-ஒரு மேரு
பொறுமையின் மேரு
ஐயா-உன் கண்ணெடுத்து என்னை-நீ பாரு 
சாயி-நீ இல்லையென்றால் வெறெனக்காரு 
(MUSIC)
நீயன்று தந்த-அன்பு பனி மலைக் குளிரு 
இன்றெனை எரிக்குதய்யா பிரிவெனும்-நெருப்பு 
எனக்கினி ஏது-ஐயா வாழ்க்கையில் பிடிப்பு
போதும் போதுமய்யா உன்-திரு நடிப்பு குறும்பெனும் நடிப்பு  
ஐயா-உன் கண்ணெடுத்து என்னை-நீ பாரு
சாயி-நீ இல்லையென்றால் வெறெனக்காரு 
 (MUSIC)
முனிவனில்..லை நானும் காவியைப் பூண  
பெரும்-யோகி..யில்லை-உனை த்யானத்தில் காண
(2)
உண்மையிலே-எனக்கு ஓர்-திறன் இல்லை (2)
உன்னையல்லால் அய்யே துணை எனக்கில்லை (2)
ஐயா-உன் கண்ணெடுத்து என்னை-நீ பாரு
சாயி-நீ இல்லையென்றால் வெறெனக்காரு 


No comments:

Post a Comment