Friday, May 5, 2017

414. சாதனையாய் சேவையை(சோதனை மேல் சோதனை) **

சாதனையாய்ச் சேவையைச் சொல்லித்தந்தார் ஸ்வாமி 
(1+SM+1)
வேறவர்-போல்யார்-வருவார் நீ-கொஞ்சம் யோசி (2)
சாதனையாய்ச் சேவையைச் சொல்லித்தந்தார் ஸ்வாமி
(MUSIC) 
தெய்வம்-ஒரு மெய்யெடுத்துத் தான்-வந்தது 
பெரும்  துன்பம்-தரும் பொய்-முடிக்கப் பார்-வந்தது 
(2)
சாதனையாய்ச் சேவையைச் சொல்லித்தந்தார் ஸ்வாமி
(MUSIC)
 சேதாரம் ஆகிடுமே உலகினில்-நல்ல 
அவர் அவதாரம் இல்லையென்றால் தருமமும் மெல்ல 
பரிகாரம் என்ற-சேவை சூரியன் தோன்ற 
நம்மில் அஹங்காரம் விலகிடுமே பனியென மெல்ல     
ஒருநாளும் அவர் சொற்கள் மறப்பதற்கல்ல
அதைப் பிசகாமல் கடைப்பிடிப்போம் வாழ்க்கையில் மெல்ல
சாதனையாய்ச் சேவையைச் சொல்லித்தந்தார் ஸ்வாமி 
வேறவர்-போல்யார்-வருவார் நீ-கொஞ்சம் யோசி
 சாதனையாய்ச் சேவையைச் சொல்லித்தந்தார் ஸ்வாமி
(MUSIC) 
ஐயா ..! காய்ந்து-போன நெஞ்சில் -எல்லாம் 
வற்றாத அன்பு- ஊற்றுப் பெருகச் செய்து 
அதை நதியாய் ஓட விட்டான்.
துன்பப்படும் மக்கள் எல்லாம்  அவன் திருநீறைப் பூசிக்கொள்வார்கள்.
அந்த திருநீறின் மகிமை ஒன்றால் அவன் தெய்வத் தோன்றல் என்று நன்றாய்ப் புரிந்துவிடும்
தானாக வந்திடுமாம் இறை-என்பது அதை-
ஊனுடம்பாய்க் காண்பது-ஓர் பிழையாகுது
ஒருகூட்டில் இருப்பதனால் குயிலானது 
அது ஒரு-காகம் ஆயிடுமா நீ-சொல்லிடு
மனிதா-உன் உள்ளம்தனில் நீ தேறுவாய் 
இறைவன்தான் சாயிபிரான் எனக் கூறுவாய்
சாதனையாய் சேவையைச் சொல்லித்தந்தார் ஸ்வாமி
வேறவர்-போல்யார்-வருவார் நீ-கொஞ்சம் யோசி 
சாதனையாய் சேவையைச் சொல்லித்தந்தார் ஸ்வாமி

No comments:

Post a Comment