தாயன்பாய் பேரன்பாய் அவன்-இருந்தான் அருள்-சுரந்தான் (2)
தந்தையுமாய் நல்குருவாய் சாயி-பிரான் வழிகொடுத்தான் (2)
தாயன்பாய் பேரன்பாய் அவன்-இருந்தான் அருள்-சுரந்தான்
(MUSIC)
அனுசரிப்பே வாழ்க்கையப்பா உன்-வாழ்வும் பிறருக்கப்பா
சேகரித்த உன்-பணத்தைக் கொடுத்தவர்க்கு உதவிடப்பா
ஏட்டுச்சுரை கல்வியெல்லாம் ஞானமில்லை உணர்ந்திடப்பா
என்பதெல்லாம் படிப்பினையாய் சாயிபிரான் சொன்னதப்பா
தாயன்பாய் பேரன்பாய் அவன்-சுரந்தான் அருள்-சுரந்தான்
(MUSIC)
உன்-பணமும் பொன்-தனமும் கடைசி-வரை வந்திடுமா
காலன்-வரும் வேளையிலே வட்டி-வந்து காத்திடுமா
பெற்ற-பிள்ளை சுற்றமெல்லாம் காடு-வரை மட்டுமப்பா (2)
உற்றதுணை சாயிபிரான் சொல்லித்தந்த சேவையப்பா
SM
உற்றதுணை சாயிபிரான் சொல்லித்தந்த சேவையப்பா
தாயன்பாய் பேரன்பாய் அவன்-இருந்தான் அருள்-சுரந்தான்
தந்தையுமாய் நல்குருவாய் சாயி-பிரான் வழிகொடுத்தான் தாயன்பாய் பேரன்பாய் அவன்-இருந்தான் அருள்-சுரந்தான்
No comments:
Post a Comment